Monday 30 July 2012

பில்லா 2, நான் ஈ வசூல் நிலவரம்


      ஓரளவு பெரிய படங்கள் வராதமையின் காரணமாக தொடர்ந்து பில்லா ௨, நான் ஈ சென்னையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆரம்பத்தில் 276 காட்சிகளாக இருந்த நான் ஈ நான்கு கிழமைகள் கழித்தும் 324 காட்சிகள் வார இறுதி நாட்களில் காட்டபடுகின்றன. அதன் திரையரங்கு நிரப்பப்படும் வீதம் குறைந்திருந்தாலும் சென்ற கிழமையை விட இந்த கிழமை வசூல் அதிகரித்திருக்கின்றது. சென்னையில் மட்டும் நான்கு கோடிக்கு மேலாக இந்த படம் நான்கு வாரங்களில் வசூலித்துள்ளது. இதில் 1.2 கோடி இந்த கிழமையில் பெறபட்டதாகும். இதன் மூலமாகவே நான் ஈ வலுவடைந்து வருகின்றது என தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில் பில்லா 2 மற்ற பெரிய திரைப்படங்களை போல இறங்கு முகம் காட்டுகின்றது. இது வரைக்கும் சென்னையில் 7.5 கோடிகளை வசூலித்திருக்கிறது. இப்போதைய கால கட்டத்தில் இது கொஞ்சம் குறைவு என்று தன சொல்ல வேண்டும். சகுனி திரைப்படம் இதுவரை 7.1 கோடியை வசூலித்திருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் பில்லா 2 வின் வசூல் கிழமைக்கு கிழமை அரைவாசி ஆகி கொண்டு செல்கிறது.
முதல் கிழமையிலே(முதல் வார இறுதியில்) 2.8 கோடியை வசூலித்தது.
இரண்டாவது வார இறுதியில் 1.4 கொடியையே வசூலித்தது.
இந்த வார இறுதியில் 74 லட்சங்களியே பெற்றுள்ளது.
நான் ஈ இந்த வார இறுதியில் 65 லட்சங்களை பெற்றது குறிப்பிட தக்கது.
பில்லா 2 வின் வார நாட்களின் வசூலும் வெகுவாக குறைந்துள்ளது. இரண்டாம் கிழமையில் அதாவது படம் வந்து மூன்று நாட்களுக்கு பிறகு 1.8 கோடியை வசூலித்த பில்லா 2 கடந்த வார நாட்களில் 72 லட்சங்களையே பெற்றுள்ளது.
எது எப்படியாய் இருந்தாலும் பில்லா 2 இதுவரை 87 கோடிகளை அண்ணளவாக பெடிருக்கலம் என கணிக்க படுகிறது.
இல்லை நாங்க சொல்வது பொய். படம் 147 கோடிகளை வசூலித்து விட்டது. சென்னையில் 98 % இருந்த திரை அரங்கு நிரப்பு வீதம் மற்றும் 926 காட்சிகள் அப்பிடியே இருந்தால் மட்டுமே பில்லா 2 பத்தாவது நாளிலும் 10 கோடிகளை வசூலித்திருக்கும். தங்களை பெரிதாக காடுவதற்கு சிலர் சொல்லும் ஆதரமற்ற வசூல் விபரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இது நாங்கள் இயற்றி எழுதியது அன்று. இது “Behindwoods” இணையதளத்தின் வசூல் நிலவரம் ஆகும்.

No comments:

Post a Comment