Sunday 15 July 2012

ஹாலிவுட் படத்திற்காக 7 வயது சிறுமியை தேடும் கமல்ஹாசன்.




       ஹாலிவுட் படத்துக்கு 7 வயது குழந்தையை தேடுகிறார் கமல்ஹாசன். பேரி ஆஸ்போர்ன் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இல் அவருடன் 7 வயது அமெரிக்க சிறுமி நடிக்கிறார். இதற்காக நடிப்பு திறமைகொண்ட சிறுமியை தேடும் பணி தொடங்கி இருக்கிறது.

இது பற்றி கமல் கூறும்போது, இந்த வேடத்துக்கு அழகான சிறுமியாக மட்டுமில்லாமல் நடிக்கும் திறமை கொண்டவர் தேவை. 7 வயது என்பது நான் சினிமாவுக்கு அறிமுகமான வயது. அந்த வயதில் ஒரு குழந்தை நடிக்க வருகிறதென்றால் அதன் மனநிலை எப்படி இருக்கும், கேமராவை எதிர்கொள்ளும்போது எந்தவிதமான எண்ணம் இருக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் என்னுடன் நடிக்கும் குழந்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றார்.

விஸ்வரூபம் படம் பார்த்த அமெரிக்கர்களுக்கு அப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பிடித்துவிட்டது. இதனால் கமலுக்கு அமெரிக்க படம் இயக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதாம். ஹாலிவுட் படத்தில் 7 வயது குழந்தையையும் கமலையும் சுற்றியே கதை நகர்கிறதாம். ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில் ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்தபின் அடுத்த ஆண்டில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தமிழ் படத்தை இயக்கி, நடிக்கிறார் கமல். இப்படத்துக்கு தமிழில் தலைவன் இருக்கிறான் என்றும் இந்தியில் ஆஸாத் ஹெய்ன் என்றும் தலைப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment