Monday 30 July 2012

சுழற்றி அடிக்கும் ஈ !


   இயக்குனர் ராஜமெளலி தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ் திரையுலகிலும் சாதனை படைத்து இருக்கிறார்.
'நான் ஈ' படம் வெளிவந்து 4 வாரங்கள் ஆகிறது. படம் வெளியான 3 வாரங்கள் கழித்து எந்த ஒரு படமும் சின்ன திரையரங்கில் இருந்து பெரிய திரையரங்கிற்கு மாற்றியது இல்லை.

தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சென்னை மாயாஜால் திரையரங்கில் வெளியான ஒரு நாளில் அவ்வளவு காட்சிகள் திரையிட்டது இல்லை என்ற சாதனையோடு வெளியான 'பில்லா 2' திரைப்படம் தற்போது வெறும் 19 காட்சிகளே திரையிடப்படுகிறது.

ஆனால் 'நான் ஈ' திரைப்படத்தை இப்போது 30 காட்சிகள் திரையிட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி சென்னை சத்யம் காம்ப்ளெக்ஸில் சின்ன திரையரங்கில் இருந்து பெரிய அரங்கிற்கு மாற்றி இருக்கிறார்கள்.

வெளியான ஒரே வாரத்தில் 'நான் ஈ' படத்தினை எடுத்துவிட்டு 'பில்லா 2' படத்தினை வெளியிட்ட காசி தியேட்டரில் தற்போது மீண்டும் 'நான் ஈ' படத்தினை திரையிட்டு இருக்கிறார்கள்.

மொத்தம் 208 திரையரங்கில் வெளியான 'நான் ஈ' திரைப்படம் 175 அரங்குகளாக குறைந்தது. அது தற்போது 185 அரங்குகளாக அதிகரித்து இருக்கிறது.

'நான் ஈ' திரைப்படம் ராஜமெளலியின் 'மாவீரன்' படத்தின் சாதனை முறியடித்து இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான 'நான் ஈ' திரைப்படம் தமிழகத்தில் 18.22 கோடி ரூபாய் 21 நாட்களில் வசூல் செய்து இருக்கிறது.

இதுவரை இரு மொழிகளில் வெளியான எந்த ஒரு படமும் இவ்வளவு வசூல் செய்தது இல்லை.

தமிழக மக்களிடம் அஜீத் நடித்த 'பில்லா 2' படம் வெளியாகியும், அப்படத்தினை பின்னுக்கு தள்ளிவிட்டு ஈ மேலே பறப்பதை அடுத்து, தயாரிப்பாளர் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

அதுமட்டுமன்றி இப்படத்தின் மொத்த வசூல் 100 கோடியை தாண்டிவிடும் என இயக்குனர் ராம்கோபால் வர்மா தெரிவித்திருந்தார். தற்போதைய வசூலே 100 கோடியை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment