Wednesday 18 July 2012

நண்பனில் ஏற்பட்ட நட்பு தொடர்கிறது. முகமூடி இசையை வெளியிடுகிறார் விஜய்.




      தமிழ்த் திரையுலகில், கதாநாயகர்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் இருப்பது போல், இயக்குனர்கள் சிலருக்கும் ரசிகர் வட்டம் உள்ளது. அத்தகைய இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் என இவரது படங்கள் அனைத்துமே இவருக்கு பல தரப்பில் இருந்து ரசிகர்களை சேர்த்து இருக்கிறது.
இவரது இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ கதை 'முகமூடி' என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.
ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், நாசர் என ஒரு திரைப் பட்டாளமே நடிக்க, 'யுத்தம் செய்' படத்திற்கு இசையமைத்த ' கே ' இசையமைத்து இருக்கிறார். தங்களது முதல் பிரம்மாண்ட தயாரிப்பாக 'முகமூடி' படத்தினை தயாரித்து இருக்கிறது யு.டிவி நிறுவனம்.
'முகமூடி' படத்தின் FIRST LOOK வெளியான போதே படத்திற்கு எதிர்ப்பார்ப்பு ஆரம்பித்தித்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 20ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. விஜய் இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்கிறார்.
மிஷ்கின் படங்கள் என்றாலே படத்தில் மஞ்சள் கலர் சேலை கட்டிக் கொண்டு, ஒரு பெண் ஆடுவது போன்று ஒரு குத்துப்பாடல் இருப்பது வழக்கம். 'கத்தாழக் கண்ணாலே', 'வாள மீனுக்கும்' போன்ற பாடல்கள் இவரது படத்தில் இடம்பிடித்து, பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
ஆனால் 'முகமூடி' படத்தில் அவ்வாறு குத்துப் பாடல் எதுவுமே இல்லையாம். அதற்கு பதிலாக TASMAC பாரில் ஒரு பாடல் இடம் பெற்று இருக்கிறதாம்.

No comments:

Post a Comment