Friday 3 August 2012

100 கோடி ! வடக்கில் பறக்கும் அசின் கொடி!


'உள்ளம் கேட்குமே'வில் அறிமுகமானாலும், 'எம். குமரன் S/O மகாலெட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலூன்றியவர் அசின்.

விஜய், அஜீத் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டு, 'கஜினி' படத்தின் இந்தி ரீமேக் மூலம் இந்தி திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடுவில் கமலுடன் 'தசாவதாரம்' படத்திலும் நடித்தார்.

அதன் பிறகு நடித்த 'காவலன்' பெரிய வரவேற்பைப் பெறாததால், இப்போது இந்தி படங்களே போதும் என்ற நிலைக்கு வந்து விட்டாராம் அசின். ஏனென்றால் அசினுக்கு அங்கு அவ்வளவு டிமாண்ட்.

இது வரை 'கஜினி', 'லண்டன் ட்ரீம்ஸ்', 'ரெடி', 'ஹவுஸ் ஃபுல் 2', 'போல் பச்சன்' என ஐந்து படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார் அசின். 'லண்டன் ட்ரீம்ஸ்' படம் மட்டுமே சரியான வரவேற்பை பெறவில்லை.

மீதமுள்ள நான்கு படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. இதனால் கடும் சந்தோஷத்தில் இருக்கிறார் அசின்.

இது குறித்து அசின் " பணக்கார நண்பர்கள், திரையுலக வழிகாட்டிகள், சொந்தக்காரர்கள் என எந்த வித பின்புலமும் இல்லாமல் பாலிவுட்டில் இவ்வளவு தூரம் வந்தது குறித்து சந்தோஷப்படுகிறேன். தென்னிந்தியா, வட இந்தியா என நாட்டின் இரு திசைகளிலும் ஒரு நடிகையை அங்கீகரிப்பது அபூர்வம். இது எனக்கு வாய்த்தததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்." என்று தெரிவித்து இருக்கிறார்.

No comments:

Post a Comment