Wednesday 29 August 2012

7 ஆண்டுகளுக்குப் பின் ஜெயலலிதா கலந்து கொள்ளும் சினிமா விழாவில் கமல், ரஜினி.





இன்று மாலை நடக்கும் ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

விழா நடக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் பழைய தமிழ் சினிமாவை நினைவூட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

எம்எஸ் விஸ்வநாதனுடன் பணியாற்றிய கலைஞர்கள், நடிகைகள் பெரும்பாலானோர் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எம்எஸ் விஸ்வநாதன் - டி கே ராமமூர்த்தி இருவருக்கும் பொற்கிழி அளித்து கவுரவிக்கும் முதல்வர், பின்னர் விழா சிறப்புரை ஆற்றவிருக்கிறார். ஏகப்பட்ட பேரை பேச வைக்காமல், ரஜினி, கமல், இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பேசக் கூடும் என்று தெரிகிறது. இளையராஜா வருவசாக உறுதி கூறியிருந்தாலும், நாளை மறுநாள் அவரது இசை நிகழ்ச்சி இருப்பதால், வருவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.

ஜெயலலிதா முதல்வரான பிறகு ரஜினி, கமல் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. அதற்கு முன்பு திரையுலகம் 2005-ல் நடத்திய விழாவில் ரஜினி, கமல் பங்கேற்று வாழ்த்தியது நினைவிருக்கலாம்.

முதல்வர் பங்கேற்கும் விழா என்பதால் கெடுபிடிகள் ஏக பலமாக உள்ளன. 5 மணி விழாவுக்கு 4 மணிக்கெல்லாம் இருக்கையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்!

No comments:

Post a Comment