Thursday 9 August 2012

நான்தான் சிம்புவின் காதலி!" தீக்ஷா சேத்



தீ
க்ஷா சேத்... தமிழ்ப் படங்களில் நடிக்க அனுஷ்கா அடம்பிடிக்க, அவர் இடத்தை நிரப்ப வந்திருக் கும் ஐஸ்க்ரீம் குதிரை! அறிமுகமான 'ராஜபாட்டை’ படம் சரியாகப் போகவில்லை என்றாலும், 'கோடம்பாக்கம்’ கொத்திக்கொண்ட அழகி.
 '' 'ராஜபாட்டை’ ரீச் ஆகாதது எனக்கும் வருத்தம்தான். முதல் படமே சொதப்பிடுச்சேன்னு எனக்கும் பயமாத்தான் இருந்துச்சு. ஆனா, தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட்ஸ் கொடுத்த 'லக்கி ஹீரோயின்’ நான். அந்த ராசி தமிழ்ல 'வேட்டை மன்னன்’, 'வருவான் தலைவன்’னு படங்களை கமிட் பண்ணிருச்சு. அதே பேரை தமிழ்லயும் எடுப்பேன்.''
''தீக்ஷா பெர்சனல் கொஞ்சம் சொல்லுங்க?''
''காதலர் தினத்தில் பிறந்த ரொம்ப ரொம்ப சிம்பிள் பொண்ணு. பல்லி, வவ்வால்னா பயம். நிறைய எக்சர்சைஸ் பண்ணுவேன். ஜங்க் ஃபுட் சாப்பிட மாட்டேன். ரொம்ப எமோஷனல் டைப். ஈஸியா அழுதுடுவேன். ஸ்டேட் லெவல் நீச்சல் போட்டிகளில்  நிறைய ஜெயிச்சிருக்கேன். தினமும் மினிமம் இரண்டு மணி நேரம் நீச்சல் அடிப்பேன். எல்லாருமே மிஸ் பண்ணாம நீச்சல் அடிச்சுப் பாருங்க... மனசு லேசாகும் உடம்பு அழகாகும். தண்ணிக்கு அடியில அகழ்வாராய்ச்சி பண்ணணும்னு எனக்கு ஆசை. மூழ்கிக் காணாமல்போன ஒரு நகரத்தையாவது  கண்டுபிடிச்சு, அதுக்கு 'தீக்ஷா சிட்டி’னு பேர் வைக்க ஆசை.''  
''ஓரளவுக்குத் தமிழ் பேசுறீங்களே... எப்படி?''
''நான் சென்னைக்குப் புதுசு இல்லீங்க.  எனக்கு ஏ.பி.சி.டி. சொல்லிக் கொடுத்ததே சென்னைதான். எல்.கே.ஜி-யில் இருந்து தேர்ட் வரை இங்கேதான் படிச்சேன். அப்பாவுக்கு அடிக்கடி சென்னை, நேபாள், மும்பைனு டிரான்ஸ்ஃபர் இருந்துட்டே இருக்கும். மும்பையில் பி.காம். படிக்கும்போது, ஃபெமினா மிஸ் இந்தியாவில் 'ஃப்ரெஷ் ஃபேஸ்’ டைட்டில் ஜெயிச்சேன். அப்புறம் தெலுங்குப் படத்தில் நடிச்சேன். இப்போ தமிழ்.''
''சிம்பு ஸ்க்ரீன் தாண்டியும் ஹீரோயின்களை இம்ப்ரெஸ் பண்ணுவார்னு சொல்வாங்களே... உண்மையா?''
''நான் சிம்புவின் ஃபேன். எல்லா விஷயங்கள்லேயும் டெடிகேட்டிவ்வா இருப்பார். ஐ ஃபீல் கம்ஃபர்ட்டபிள் வித் சிம்பு.''
''ஆனா, 'வேட்டை மன்னன்’ல நீங்க ரெண்டாவது ஹீரோயின். ஹன்சிகாதான் முதல் ஹீரோயின்னு சொல்றாங்க?''
''அதுக்குள்ள வதந்தி கிளம்பிடுச்சா? படத்தில் ஹன்சிகாவுக்கு கேங்ஸ்டர் கேரக்டர். நான்தான் சிம்புவோட காதலி. யார் ஹீரோயின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.''
''சினிமாவில் யாரெல்லாம் உங்க ஃப்ரெண்ட்ஸ்?''  
''விக்ரம் ரொம்ப ஃப்ரெண்ட்லி. சிம்பு செம கலகல. இப்போ ரெண்டு பேருமே என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஆந்திரால அல்லு அர்ஜுன், கோபி சந்த், ரவிதேஜா, பிரபாஸ்... இவங்க எல்லாருமே என் ஃப்ரெண்ட்ஸ் தான்.''  
''ஒரு ஹீரோயின்கூட உங்களுக்கு ஃப்ரெண்ட் இல்லையா?''
''ஆங்... எனக்கு ஃப்ரெண்டா இருக்க ஆசைதான். ஆனா, யாரும் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பலியே!'

No comments:

Post a Comment