Wednesday 1 August 2012

ஆதிபகவன் படம் தாமதமானது ஏன்? படக்குழுவினர் வெளியிடும் ரகசியம்.

      படத்தை ஆரம்பித்தால், அப்படம் எப்போது முடியும் என்பது அவருக்கே தெரியாது. யாருக்கு? இயக்குனர் அமீருக்கு!

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், நடிகர்களிடமிருந்து தேவையான நடிப்பை வாங்கி படத்தினை செதுக்குவார் அமீர்.

ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் 'ஆதிபகவன்' படத்தினை இயக்கி வந்தார் அமீர். படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை வரிசையாக காட்சிப்படுத்துவதால் தான் தாமதம் என்று செய்திகள் வெளியானது.

எப்படி என்றால், படத்தின் முதல் காட்சி மும்பையில் என்றால் அங்கு சென்று காட்சிப்படுத்தி விட்டு திரும்பி விடுவது, இறுதி காட்சி திரும்பவும் மும்பை என்றால் திரும்பவும் மும்பைக்கு செல்வது என்று 'ஆதிபகவன்' படத்தினை அதே வரிசையில் காட்சிப்படுத்தினாராம் அமீர்.

இப்படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே படத்தை எப்போது முடிப்பார் என்ற எரிச்சல் அடைந்தாலும், படம் நன்றாக அமைந்து இருப்பதில் சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.

ஒரு வழியாக 'ஆதிபகவன்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது. ஜெயம் ரவி எப்போதுமே ஒரு படத்தினை முடித்து விட்டுதான் அடுத்த படத்திற்கு தேதிகள் ஒதுக்குவார். 'ஆதிபகவன்' படத்தினால் அதிகம் பாதிப்படைந்தவர் என்றால் அது ஜெயம் ரவி தான்.

'ஆதிபகவன்' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை ராஜஸ்தானில் படமாக்கி வந்தார்கள். இப்படத்தின் இறுதிவடிவம் அமீருக்கு பெரும் திருப்தியளித்து இருக்கிறதாம்.

படத்தினை செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment