Monday 27 August 2012

நான் பெரிய சோம்பேறி. சினிமாவில் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. ஷங்கர்




    விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமன்குமார், ரீமா சென், பிந்து மாதவி பியா நடிக்க மீண்டும் ரீமேக் ஆகிறது.
வடபழனியில் நடந்த இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பங்கேற்று பேசியதாவது:-

சினிமாவில் நான் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. அப்படி சாதித்ததாக யாரேனும் கருதினால் அந்த பெருமை எஸ்.ஏ.சந்திரசேகரையே சாரும். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக சேரும் முன் நாடக நடிகராக இருந்தேன். சில மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது நான் பெரிய சோம்பேறி.
எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் நடிக்க வாய்ப்பு கேட்டுப் போனேன். ஆனால் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டேன். சுறுசுறுப்பு, ஒழுக்கம் , நேரம் தவறாமை அனைத்தையும் அவரிடம்தான் கற்றேன். என்னை போல் பல இயக்குனர்களை எஸ்.ஏ. சந்திரசேகரன் வளர்த்து விட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் விமலாராணி, படத்தின் இயக்குனர் சினேஹா பிரிட்டோ மற்றும் தமன்குமார், ரீமாசென், பிந்து மாதவி பங்கேற்றனர்.

No comments:

Post a Comment