Wednesday 1 August 2012

சசிகுமார் படத்தை விலைக்கு கேட்கும் சூர்யா நிறுவனம்!


      வெங்கட்பிரபுவின் உதவியாளர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் ‘அட்டக்கத்தி’ படத்தை வாங்கி, ஒரு ஏரியாவைக் கூட யாருக்கும் விற்காமல் தமிழகம் முழுவதும் தானே ரிலீஸ் செய்கிறது சூர்யாவின் சொந்தப்பட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோ!

தற்போது இந்தப் படத்தை தொடர்ந்து சசிகுமார் ஹீரோவாக நடித்து தயாரித்து வரும் ‘ சுந்தரபாண்டியன்’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை விலைக்கு கேட்டிருகிறதாம் சூர்யாவின் படக்கெம்பெனி! காரணம் வேறொன்றும் இல்லை! இந்தப் படத்தை இயக்கும் சசியின் உதவியாளர் பிரபாகரன் இயக்குகிறார். முதலில் இந்தக்கதை ரெடியானதும் கார்த்திக்குத்தான் சொல்லியிருகிறார். கார்த்தியும் கதை ரொம்ப நல்லா இருக்கு! பருத்திவீரணுக்கு அப்புறம் நான் இப்படித்தான் ஒரு மதுரைக் கதையை எதிர்பார்த்தேன். ஆனால் 2013 ஆகஸ்ட்வரை பொறுத்திருங்கள் என்றாராம்! இதை சசியிடம் பிரபாகரன் சொல்ல, அதற்கு கார்த்தியின் மார்கெட் எங்கேயோ போய்விடும், நானே நடிக்கிறேன், தயாரிக்கிறேன் படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருகிறார் சசி! மேலும் ஈசன் கடனில் இருக்கும் சசிக்கு நம்ம படம் உதவினால் சந்தோஷமே என்று பிரபாகரன் உடனே களத்தில் இறங்க முதல் 20 நாள் படப்பிடிப்பை முடித்து எடிட் செய்து பார்த்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் வேறொரு படத்தில் இந்த படத்தின் நாயகி லட்சுமி மேன்னை புக் செய்வதற்காக இந்தப் படத்தின் ரஷ்காட்சிகளை பார்த்த, க்ரீன் ஸ்டூடியோ உரிமையாளர் ஞானவேல் மிரண்டுபோய் கார்த்தியிடம் சொல்ல, நமக்கு கிடைக்காவிட்டாலும், நமக்கு தியேட்டர் உரிமை கிடைத்தால் கூட ஒகேதான் வாங்குங்கள் என்று சொல்ல தற்போது 5 கோடி ரூபாய்க்கு தியேட்டார் உரிமையை கேட்கிறார்களாம்!

அப்படியென்ன இந்தப் படத்தில் புதுச்சரக்கு இருக்கு என்று பார்த்தால் மதுரையை இனிக்க இனிக்க காதல் பின்னனியில் அலசும் முதல் யதார்த்த வகைப்படமாக இருக்கும் என்பதுதான் காரணம் என்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கூட அறுவாலோ, ஒரு சொட்டு ரத்தமோ கிடையாது! ஆனால் முழுக்க முழுக்க மதுரைதான் படம் என்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் நடித்து வெளியன ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ போல, சசிகுமாரை கடனில் இருந்து மீட்டு எடுக்குமா அவர் நடிக்கும் சுந்தரபாண்டியன் என்றால்… “ கண்டிப்பாக! என்று உற்சாகமாகக் கூவுகிறார்கள் அவரது உதவியாளர்கள் தரப்பில்! ” சசி ஒரு கதையை தேர்ந்தெடுத்தார் என்றால் அது கில்லி மாதிரி ரசிகர்களுக்கு பிடிக்கும். ‘சுந்தரபாண்டியமும் அப்படித்தான்” என்கிறார்கள்! படத்தைப் பற்றி சசியிடம் கேட்டால்… தனது உதவியாளரை விட்டுக்கொடுக்காமல் உற்சாகமாகப் பேசுகிறார்.

“தனியாப் படம் பண்ண விரும்பி ஒரு கதை பண்ணதும், பிரபு என்கிட்ட வந்து நிக்கலை. ரெண்டு மூணு தயாரிப்பாளர்கள்கிட்ட கதை சொல்லி அது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தும், அவங்களால பண்ண முடியாமப்போச்சு. இருந்தாலும், அவன் வெளியேதான் வாய்ப்பு தேடிட்டு இருந்தான். அந்தத் தேடலோட தீவிரம் எனக்குப் பிடிச்சது. அவன் போராட்டம் என் போராட்டமாத் தெரிஞ்சது. 'கதை சொல்லு... பார்ப்போம்’னு சொன்னேன். மழையில நனைஞ்ச செடி மாதிரி சிலிர்க்கவெச்சான். ஸ்பாட்ல பிரபு வேலை பார்க்கிற விதம் எனக்குப் பெருமையா இருக்கு. சுந்தரபாண்டியனுக்கு அடுத்தபடியா இன்னும் ரெண்டு அறிமுக இயக்குநர்களோட படங்கள்ல நடிக்கிறேன். அதுக்கான தைரியத்தைக் கொடுத்தது பிரபுதான்.'' என்று ஆச்சர்யப்படுத்தும் சசியிடம் கதை பற்றிச் சொல்ல முடியுமா என்றால்.. “ இது புதிதாக பூக்க இருக்கும் ஒரு கலைஞனின் உண்மையும் கற்பனையும் கலந்த காப்பிரைட் சம்பந்தப்பட்டது. அவனைக் கேட்காமல் நான் படத்தைப் பற்றி அதிகமாக பேச முடியாது! என்று பொடி வைக்கிறாரார்! சசி இந்த இடத்தில் ஹீரோ இல்லை, ஒரு மாணவனின் குரு!

No comments:

Post a Comment