Sunday 5 August 2012

நீர் பறவை இலங்கை அகதியின் கதை

Neerparavai storyதேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி. இவர் தற்போது இயக்கி வரும் படம் நீர்பறவை. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. விஷ்ணு, சுனேனா, சரண்யா இவர்களுடன் நந்திதா தாஸ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் திருச்செந்தூரைச் சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் நடந்து முடிந்துள்ளது. இப்போது டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. மீண்டும் தேசிய விருது மற்றும் கமர்ஷியல் வெற்றி இவற்றை கருத்தில் கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கடலில் தனித்து வரும் ஒரு படகில் இலங்கை அகதியின் குழந்தை ஒன்று இருக்கிறது. அதை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஊர் பெரியவர் எடுத்து வளர்க்கிறார். அவர்தான் விஷ்ணு. அவர் பெரியவரானதும் பக்கத்து ஊரைச் சேர்ந்த இன்னொரு பெரும்புள்ளியின் மகள் சுனேனாவைக் காதலிக்கிறார். அப்போது பிரச்னை உருவாகிறது. என்ன ஜாதி, மதம் என்று தெரியாதவன் எங்கள் ஊர் பெண்ணை காதலிப்பதா என்று ஊர்களுக்குள் பிரச்னை வருகிறது. இதற்கு தீர்வு சொல்வதுதான் கதை. அகதிகளும் மனிதர்கள்தான். அவர்களை பாதுகாக்கவும், மதிக்கவும் வேண்டியது நம் கடமை என்கிற மெசேஜ் சொல்லும் படம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment