Thursday 9 August 2012

கெளதம் மேனன் தயாரிப்பில் துள்ளி வரும் தங்க மீன்கள்!


கெளதம் மேனன் தயாரிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் 'தங்க மீன்கள்'. 'கற்றது தமிழ்' படத்தினை அடுத்து ராம் இயக்கும் படம் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

கெளதம் மேனன் தயாரித்த இப்படம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக படப்பணிகளை துவங்கி விட்டார்கள்.

'தங்க மீன்கள்' படத்தின் இசையை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் ஆல்பத்தில் ஒரு சிறப்பு இருக்கிறது.

குழந்தைகளுக்கான கீதம் ஒன்றை இப்படத்திற்காக தயார் செய்து இருக்கிறார் யுவன். தந்தைக்கும், மகளுக்குமான உறவை சொல்லுகிறது அப்பாடல்.

இன்றைய கல்வி முறை, தேர்வு முறை, ஆசிரியர்கள், இன்றைய மாணவர்கள் மற்றும் பள்ளிகூடத்தை பற்றிய இந்த பாடல் நிச்சயம் குழந்தைகளுக்கான கீதமாக அமையும் என்று கூறி இருக்கிறார் இயக்குநர் ராம். இப்பாடலை மட்டும் கொண்டு ஒரு பிரத்யேக ஆல்பத்தினை தயார் செய்ய திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

இந்த ஆல்பத்திற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்று, பள்ளிக் குழந்தைகளுடன் இசையமைப்பாளர் யுவனை ஆடிப்பாடவைத்து படமாக்க இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment