Tuesday 14 August 2012

ஹாலிவுட்டை தமிழ்படங்கள் நெருங்கி விட்டது. ரஜினிகாந்த்




       ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்த படம் ‘சிவாஜி'. ஷங்கர் இயக்க¤னார். ஏ.ஆர்.ரகுமான் இசை. 5 வருடத்துக்கு முன் வெளியான இப்படத்தை 3டி யில் மாற்றம் செய்திருக்கின்றனர். இதன் முன்னோட்ட காட்சி மற்றும் பாடல் காட்சிகள் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ரஜினிக்கு திரையிடப்பட்டது. இது பற்றி ரஜினி கூறியதாவது:

'சிவாஜி' படத்தை 15 நாட்களுக்கு முன் 3 டியில் சில காட்சிகளை பார்த்தேன். அப்போது என் படம் என்றுகூட நினைக்காமல் 3டி காட்சிகளை பார்த்து கைதட்டி ரசித்தேன். 'கோச்சடையான்' படமும் 3டி யில் வெளியிட உள்ளோம். அதற்குமுன் ஏவிஎம் முந்திக்கொண்டது. பத்திரிகையாளர்களுக்கு இப்படம் பிடித்திருக்கிறது. நீங்களே கைதட்டி ரசித்தீர்கள் என்றால் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

‘நான் நடித்த வேறு எந்த படத்தை 3டியில் மாற்றலாம்?, என்கிறார்கள். ,எந்திரன்,படையப்பா படங்களை மாற்றலாம். பிரமாண்டமான படங்களை 3டியில் மாற்றினால்தான் சரியாக இருக்கும். ‘தொடர்ந்து 3 டி படங்களில் நடிப்பீர்களா? என்று கேட்கின்றனர். அதற்கு ஏற்ற சப்ஜெக்ட் வேண்டும். இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஹாலிவுட்டை தமிழ்படங்கள் நெருங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் இப்படித்தான் படங்கள் வரப்போகிறது. கறுப்பு வெள்ளை படம் முதல் 3டி காலகட்டம் வரையிலும் நான் நடித்துக்கொண்டிருப்பது சந்தோஷம். ஆண்டவன் தீர்மானித்தபடிதான் என்வாழ்வில் ஒவ்வொன்றும் நடக்கிறது. இனியும் அப்படித்தான்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார். பேட்டியின்போது ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், பிரசாத் ஸ்டுடியோ தொழில்நுட்ப கலைஞர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment