Friday 17 August 2012

ரஜினியின் கோச்சடையான் ஆடியோ உரிமம்: சோனி நிறுவனம் வாங்கியது


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.



ரஜினிகாந்த், தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், ரஜினியுடன் தீபிகா படுகோனே, ஷோபனா, ருக்மினி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


முப்பரிமாண முறையில் (3டி) தயாராகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் விக்கிரம சிம்மா என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. மேலும் இந்தி, மலையாளம், ஜப்பான் மற்றும் ஆங்கிலத்திலும் இப்படம் வெளியிடப்படுகிறது.


இப்படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோச்சடையான் ஆடியோ உரிமத்தை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.


இதுபற்றி சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அசோசியேட் இயக்குனர் அசோக் பர்வானி கூறுகையில், தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்பில் இருக்கும் கோச்சடையான் ஆடியோ உரிமத்தை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


சிறந்த நடிகர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இசையமைப்பாளர் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்த ஆடியோவை புதுமையான மார்க்கெட்டிங் அம்சங்கள் மூலம் ஏராளமான இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

No comments:

Post a Comment