Thursday 9 August 2012

சிங்கப்பூரில் இன்று மாற்றான் இசை வெளியீடு. சென்னையில் இருந்து செல்லும் திரையுலக பட்டாளம்.



 சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கும் மாற்றான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் இன்று நடக்க உள்ளது. இதில் நடிகர், நடிகைகளின் நடனமாடுகிறார்கள். விழாவில் படத்தில் ஜோடியாக நடித்த சூர்யா, காஜல் அகர்வால் பங்கேற்கின்றனர்.

சிவகுமார், கார்த்தி, சினேகா, பிரசன்னா, திவ்யா ஸ்பந்தனா, சோனியா அகர்வால், டைரக்டர்கள் லிங்குசாமி, கவுதம்மேனன், ஹரி, ஏ.எல்.விஜய், கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
நடிகைகள் அஞ்சலி, பூர்ணா, நீதுசந்திரா, தன்ஷிகா ஆகியோர் மேடையில் நடனம் ஆடுகின்றனர்.
பின்னணி பாடகர்கள் கார்த்திக், விஜயபிரகாஷ், வேல்முருகன், ஹரிசரன், விஜய் பாலகிருஷ்ணன், எம்.கே. பாலாஜி, சுசித்ரா ரெட்டி, சுனிதாசாரதி ஆகியோர் மேடையில் பாடுகின்றனர்.
விழா நடைபெறும் சிங்கப்பூர் எக்ஸ்போ ஹாலில் 5 ஆயிரம் ரசிகர்கள் அமரவசதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் 150 பேர் செல்கின்றனர்

No comments:

Post a Comment