Friday 17 August 2012

சினிமால ஒரு தோல்வி அவ்வளவு கசக்கும்! நான் ஈ சுதீப்



மு
ன்னாடிலாம் சென்னைக்கு வந்தா என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆனா, இப்போ  சிக்னல்ல கார் கண்ணாடி தாண்டிலாம் சிரிக்கிறாங்கப்பா!'' - அதிர அதிரச் சிரிக்கிறார் 'நான் ஈ’ சுதீப். 'என்னைவிடச் சிறந்த வில்லன்’ என்று ரஜினியிடம் பாராட்டு வாங்கிய கன்னடத்தின் 'மோஸ்ட் வான்டட் ஹீரோ’!
 ''பெர்சனலா எனக்குத் தமிழ் சினிமா ரொம்பப் பிடிக்கும். கன்னடத்தில் நான் நடிச்ச முதல் படம் சூப்பர் ஃப்ளாப். டி.வி. சீரியல்கள் பக்கம் ஓடிட்டேன். 'சேது’ கன்னட ரீ மேக் 'கிச்சா’ படத்துக்காக மொட்டை அடிக்கணுமேனு கன்னட ஹீரோக்கள் ஒதுங்கினப்போ, நான் மொட்டை அடிச்சு நடிச்சேன். 'கிச்சா’ சுதீப்னு கர்நாடகாவே கொண்டாடுச்சு. அடுத்தடுத்து 'வாலி’, 'ஆட்டோகிராஃப்,’ 'சிங்கம்’ பட ரீமேக்கு களில் நடிச்சேன். எல்லாப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். தமிழ் சினிமாவுக்கும் அதன் ரசிகர்களுக்கும் நன்றி.''
'' 'நான் ஈ’ தெலுங்குப் படம். அந்தப் பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆந்திராக்காரர். கன்னட நடிகரான உங்களை எப்படி அதில் நடிக்கவெச்சார்?''
''ராம்கோபால் வர்மாவின் 'ரான்’ படத்துல  நடிச்சேன். 'நான் ஈ’ படத்துக்கு ராஜமௌலி வில்லன் தேடிட்டு இருந்தப்போ, வர்மா என்னைப் பத்தி அவர்கிட்ட சொல்லி இருக்கார். ராஜமௌலி ஒரு நெகட்டிவ் வார்த்தையைக் கூடப் பேச மாட்டார். பொம்மையைக் கையில கொடுத்தாக்கூட, 'இதை ரிமோட் கன்ட்ரோல்ல இயக்க முடியும்’னு பாசிடிவ் பேசுற மனிதர்.''
''தமிழ் சினிமாவில் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா?''
'' 'நந்தா’ படத்துல நடிக்கும்போதே சூர்யா நல்ல அறிமுகம். எனக்கும் பைக் ரேஸ் பிடிக்கும். ஸோ, அஜித்தும் நானும் நிறையப் பேசிப்போம். விஜய், விக்ரம், தனுஷ் எல்லார்கூடவும் டச்ல இருக்கேன்.''
''படத்துல 'ஈ’யைப் பார்த்துப் பயந்தீங்க. நிஜத்துல எது மேல பயம்?''
''வெள்ளிக் கிழமை மேல! ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நிறையப் படங்கள் ரிலீஸாகுது. அதுல எந்தப் படம் நம்ம பொசிஷனை அடிச்சு உதைக்கும்னு பயமா இருக்கும். வெள்ளிக் கிழமை என் படம் ரிலீஸான அன்னைக்கு நாள் முழுக்க மரண பயமா இருக்கும். ஏன்னா, சினிமால ஒரு தோல்வி அவ்வளவு கசக்கும்!''

No comments:

Post a Comment