Monday 13 August 2012

திகரிக்கும் வெளிநாட்டில் பாடல் வெளியிடும் சீசன்...! யாருக்கு லாபம்...?!!

increasing audio launch function in foreginதமிழ் சினிமாவில் யாராவது எதையாவது புதிதாக செய்துவிட்டால் அதையே எல்லோரும் கெட்டியாக பிடித்துக் கொள்வார்கள். அப்படித்தான் இப்போது வெளிநாட்டில் பாடல்களை வெளியிடும் சீசனை தொடங்கி விட்டார்கள். முன்பு ஒன்றிரண்டு படங்களின் பாடல் வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடந்ததுண்டு. அவை அத்திபூத்தமாதிரி எப்போதாவது, ஏதாவது ஒரு காரணத்துக்காக நடக்கும். ஆனால் இப்போது வெளிநாட்டில் பாடல்களை வெளியிடுவது அது பெரிய படம் என்று காட்டுவதற்கும், தங்களின் சக்தியை காட்டுதற்காகவுமே நடத்தப்படுகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா பாடலை கவுதம் மேனன் வெளிநாட்டில் வெளியிட்டார். எந்திரன் பாடல்கள் மலேசியாவில் வெளியிடப்பட்டது. உச்சிதனை முகர்ந்தால் என்ற சிறிய படத்தின் பாடல் வெளியீடுகூட லண்டனில் நடந்தது. தாண்டவம் படத்தின் பாடல்கள் முதலில் லண்டனில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் மாற்றான் படத்தின் பாடல்கள் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. இப்போது பரதேசி படத்தின் பாடல்களை லண்டனிலும், கோச்சடையான் பாடல்களை ஜப்பானிலும் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வெளிநாட்டில் பாடல்கள் வெளியிடப்படுதால் அந்த தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லை என்பதுதான் உண்மை. விமான செலவு, ஓட்டல் செலவு, உணவு செலவு, பார்ட்டி செலவு, விழாச் செலவு எல்லாம் சேர்ந்து கோடியை தொட்டுவிடுமாம். இதில் லாபம் யாருக்கு? நடிகர் நடிகைள் உள்ளிட்ட விழாவில் பங்கேற்பவர்களுக்குதான். தயாரிப்பாளர் செலவில் ஒரு ஜாலி டூர் சென்று விட்டு வருகிறார்கள். விழாவில் நடனம் ஆடும் நடிகைகள் கணிசமான தொகையை சம்பளமாக பெறுகிறார்கள்.

வெளிநாட்டில் பாடல் வெளியீட்டு விழா நடத்துவதால் ஒரு கேசட் கூட அங்கு அதிமாக விற்று விடப்போவதில்லை. வெளிநாடு வாழ் தமிழர்கள் இணையதளத்தில் டவுண்லோட் செய்து கேட்டு விடுவார்கள். படத்திற்கான புரமோசன் என்று எடுத்துக் கொண்டால்கூட எந்த வெளிநாட்டு தமிழனும் பாடல் வெளியீட்டு விழாவில் மயங்கி படம் பார்த்துவிடுவதில்லை. மவுத்டாக், இணைய தள விமர்சனங்கள் பார்த்துதான் படம் பார்ப்பார்கள்.

"தயாரிப்பாளரின் தலையில் சுமையை ஏற்றும் இதுபோன்ற ஆடம்பரங்களை தவிர்த்தால்தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். ஒரு சினிமாவை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திட்டமிட்டு அதற்காக செலவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். வியர்வை சிந்தி உழைத்த பணத்தை தியேட்டரில் கொடுத்து படம் பார்க்கும் அம்மாபட்டி ரசிகனும், ஆண்டிப்பட்டி ரசிகனும் ஏனோ சினிமாகாரர்கள் கண்களுக்கு தெரிவதே இல்லை" என்று வருத்தப்படுகிறார். ஒரு முன்னணி தயாரிப்பாளர்.

No comments:

Post a Comment