Tuesday 25 September 2012

கும்கியில் ஒரு பாடலுக்காக 8 மாதம் காத்திருந்து படமாக்கினேன்: நெகிழ்கிறார் பிரபுசாலமன்!

Prabhu solomons kumki experienceலீ, லாடம், கொக்கி போன்ற படங்களை டைரக்டர் பிரபுசாலமன் இயக்கி இருந்தாலும் மைனா படம் தான் அவ‌ரை அடையாளம் காட்டியது. அதில் நடித்த அமலாபால் இப்போது எங்கோ உச்சத்துக்கு சென்றுவிட்டார். மைனாவுக்கு அடுத்து பிரபுசாலமன் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் கும்கி. பிரபு மகன் விக்ரம் பிரபுவை இப்படத்தில் அறிமுகப்படுத்துகிறார் பிரபுசாலமன். அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து வந்தவரை, அழுக்கு சட்டையுடன் யானை வளர்க்கும் பாகனாக சேற்றில் புரட்டி எடுத்திருக்கிறார் இயக்குநர். முதல்படம் என்று சொல்ல முடியாதபடி அத்தனை நேர்த்தியாக நடித்து கொடுத்திருக்கிறார் விக்ரம். கும்கி படத்தை வெயில், காற்று, மழை, குளிர் என நான்கு காலங்களிலும் எடுத்துள்ளார்.

கும்கி படம் காதல் பற்றி பேசும் படமாக இருந்தாலும், மாணிக்கம் என்ற யானையும் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறது. மைனா லொகேஷன் போல கும்கியிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பல்வேறு இடங்களில் படமாக்கி இருக்கிறார் பிரபுசாலமன். அதிலும் ஒரு பாட்டுக்காக கிட்டத்தட்ட எட்டுமாத காலம் காத்திருந்து ஜோக் நீர்வீழ்ச்சியில் பிரம்மாண்ட முறையில் படமாக்கி இருக்கிறார். திரையில் இந்த பாடலை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு ஒரு வித உணர்வை ஏற்படுத்தும் என்கிறார். தற்போது படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கும்கி படம் நிச்சயம் ஒரு பெரிய மைல்கல்லாக பேசப்படும் என்று உறுதிபட கூறுகிறார் பிரபுசாலமன்.

No comments:

Post a Comment