Tuesday 25 September 2012

விஸ்வரூபம் தள்ளிப்போவது ஏன்?


Why vishwaroopam release delayingகமல், பூஜாகுமார், ஆன்ட்ரியா நடித்துள்ள படம் விஸ்வரூபம் கமலே இயக்கி உள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டநிலையிலும் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் அன்றுதான் வெளிவரும் என்று இப்போது கூறப்படுகிறது.

விஸ்வரூபம் தள்ளிப்போவதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படகிறது. ஒன்று படத்தில் ஆரோ 3டி என்ற சவுண்ட் தொழில்நுட்பத்தை கமல் பயன்படுத்த விரும்புகிறார். இது ரெட் டெய்ல்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில் நுட்பத்தை படத்தில் இணைக்க 100 நாட்கள் தேவைப்படுமாம்.

இரண்டாவது காரணம். படத்தில் கிளைமாக்ஸ் கிடையாதாம். கிளைமாக்ஸ் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்று கார்டு போடுகிறார்களாம். இது சரியாக வருமா? ஒரு கிளைமாக்சை எடுத்து கையில் வைத்துக் கொள்வோம். ஒருவேளை ரசிகர்கள் ஏற்கவில்லை என்றால் எடுத்து வைத்திருக்கும் கிளைமாக்சை இணைத்து விடலாமா? என்பதில் கமல் குழம்பி போய் இருப்பதாக சொல்கிறார்கள்.

மூன்றாவது காரணம். படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டது. ஆனால் அந்த அளவுக்கு படம் வியாபாரமாகவில்லை. அதனால் சொந்தமாகவே வெளியிட்டு விடலாமா? அல்லது லாபத்தை பார்க்காமல் விற்று விடலாமா என்பது குறித்தும் விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று காரணங்களில் எது உண்மை என்பது யாருக்கும் தெரியாது.

No comments:

Post a Comment