Thursday 29 November 2012

மணிரத்னத்திற்கு கதை உருவாக்க தெரியாது! கோவை தம்பி


Kovai thambi slams maniratnamமணிரத்தனத்திற்கு கதை உருவாக்கத் தெரியாது; அவரால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று தயாரிப்பாளர் கோவை தம்பி கூறியுள்ளார். மணிரத்னம், கோவைத் தம்பி இடையேயான மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதயக் கோவில் நான் எடுத்த மோசமான படம். அந்த கதைக்குள் தெரியாமல் சிக்கிவிட்டேன் என்று மணிரத்னம் பேட்டி அளித்து இருந்தார். இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் கோவைத் தம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது கோவை தம்பி அளித்துள்ள பேட்டியில், மணிரத்னம் ஸ்கூட்டரில் என் அலுவலகத்துக்கு வந்து வாய்ப்பு கேட்டார். நான் இதயக்கோவில் கதையை கொடுத்து இயக்கச் சொன்னேன். தற்போது 28 வருடத்துக்கு பிறகு அது மோசமான படம். அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார். கதை பிடிக்காவிட்டால் அப்போதே மறுத்து இருக்கலாம். அந்த நேரம் அவர் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார். மணிரத்னத்துக்கு ஷாட் எடுக்க அப்போது சரியாக தெரியவில்லை. செட் போட்டு பணம் எல்லாம் வீணானது. கல்யாண மண்டபங்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து கொடுத்தேன். எனக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவும் காரணமாக இருந்தார். இதயகோவில் படத்தை நன்றாக இயக்கி இருந்தால் எனக்கு நிறைய லாபம் கிடைத்து இருக்கும். 35 ரோலில் முடிக்க வேண்டிய படத்தை 70 ரோலுக்கு கொண்டு போய்விட்டார். இதனால் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. அவருக்கு கதை உருவாக்க தெரியாது, என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment