Wednesday 5 December 2012

'ச்சும்மா அதிரும்' சிவாஜி 3D !

'சிவாஜி' படத்தில் ரஜினி ஒரு வசனம் சொல்லுவார் "ச்சும்மா அதிருதுல்ல!". 3D-யில் 'சிவாஜி' படம் பார்க்கும் பொழுது, இந்த வசனத்தை போலவே தியேட்டரே சும்மா அதிருகிறது. படத்தில் வரும் 'வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி' மற்றும் 'சஹானா சாரல் தூவுதோ' ஆகிய பாடல்களையும், ஒரு சண்டைக் காட்சியையும் பத்திரிகையாளர்களுக்காக சென்னை சத்யம் தியேட்டரில்,3D-யில் நேற்று (03 டிசம்பர் ) திரையிட்டு காண்பித்தார்கள்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், திடீரென திரையில் 3D-யில் தோன்றிய ரஜினி "நான் வெளியூர்ல இருக்கேன். 'சிவாஜி’ படத்தை ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் பல கோடி ரூபா செலவுல மிக பிரமாண்டமா தயாரிச்சு ரிலீஸ் பண்ணாங்க.. இப்ப படத்தை அதைவிட ரெண்டு மடங்கு செலவு செஞ்சு 3D படமா மாத்திருக்காங்க. இந்த செலவுல, 2 பிரமாண்ட படங்களே எடுத்திருக்கலாம்.. ஆனா என் பிறந்தநாள் பரிசா ரசிகர்களுக்கு இந்த 3D படத்தை ஏவி.எம். குடுத்திருக்காங்க.. இந்த படத்தை நான் 3Dல பாத்தேன்.. ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. நீங்களும் பாருங்க" என்றார்.

இயக்குனர் ஷங்கர் " சிவாஜியை 3Dல பண்ண என்ன இருக்கு.. 'எந்திரன்'லயாவது 3D பண்ண நிறைய ஸ்கோப் இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சிவாஜி படம் 3D-ல பிராமாதமா வந்திருக்கு. நான் பாத்த ஆங்கில படங்களை விட சிவாஜி பிரமாதமா இருக்கு. 3Dல படம் பார்த்தா ஏதாவது கண்ணுகிட்ட வந்து குத்தற மாதிரியே இருக்கும். ஆனா 'சிவாஜி'ல Petals ( பூ இதழ்கள் ) கண் முன்னாடி வருவது ரொம்ப அழகா இருந்தது. இதுக்கு முதல்ல பாராட்ட வேண்டியது கே.வி.ஆனந்த்தை தான். 3D பண்ண மாதிரியே பண்ணியிருக்கிறார். நான் டைரக்டராக பார்க்காம ஒரு பார்வையாளராக தான் பார்த்தேன். படம் பிரமாண்டமா வந்திருக்கு" என்றார்.

வைரமுத்து "ரசிகர்கள் 'சிவாஜி' படத்தை கொண்டாடுவார்கள். பழைய தொழில்நுட்பத்தில் தூரத்தில் இருந்த ரஜினி புதிய தொழில் நுட்பத்தால் நம் அருகில் வந்து மேலும் நெருக்கமாகிறார். ரஜினி இந்த படத்தில் மிக அழகாக தெரிகிறார். இந்த படம் தான் ரஜினியின் பிறந்தநாள் பரிசு, புத்தாண்டு பரிசு, பொங்கல் பரிசு! " என்றார்.

Dolby Atmos தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படம் 'சிவாஜி 3D' தான்.

No comments:

Post a Comment