Thursday 10 January 2013

எப்பொழுதுமே நான் ஒரு அதிருப்தியாளன். என்னை திருப்திபடுத்தவே முடியாது. கமல்


www.thedipaar.comநடிகர், நடிகைகளும் பிசினஸ்மேன்கள் ஆகிவிட்டதாக, நடிகரும் இயக்குனருமான கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

விஸ்வரூபம் வெளியிடப்படுவதையொட்டி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் சாராம்சம்:

''எனது திரையுலக வாழ்க்கையில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால், இன்னும் பணியாற்றிக்கொண்டு இருக்கமாட்டேன்; இந்தப் பேட்டியையும் அளித்திருக்க மாட்டேன். கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. நான் ஓர் அதிருப்தியாளன்.

தற்போதுள்ள பெரும்பான்மையான நடிகர், நடிகைகள் பிசினஸ்மேன்களே. ஒருவர் நட்சத்திரம் ஆகிவிட்டதும் பணமும் புகழுமே அவரது நோக்கமாகிவிடுகிறது. கலைத் திறமைப் பற்றியும் படைப்புப் பற்றியும் கவலையே கொள்வதில்லை. எப்போதுமே வசூலை நோக்கியே பயணிக்கிறார்கள்.

விஸ்வரூபம் ரூ.150 கோடியை வசூல் செய்யவில்லை என்றால், அது என்னுடைய தோல்வி ஆகிவிடும். அப்படி நேராமல் முதல் வாரத்திலேயே அந்த இலக்கு எட்டப்படும் என நம்புகிறேன்.

பாலிவுட்டுக்கும் தென்னிந்திய திரைப்படத் துறைக்கும் இடையே நட்சத்திர கலாசாரம் வேறுபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். தெற்கில் கோயில் கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்; மும்பையில் மதச் சடங்களுகளில் ஈடுபடுகின்றனர். அமிதாப் பச்சன் உடல்நிலை குன்றியபோது, ரசிகர்கள் நடத்திய சிறப்புப் பூஜைகளே இதற்குச் சான்று" என்றார் நடிகர் கமல்ஹாசன்.

No comments:

Post a Comment