▼

Monday, 27 August 2012

அஜித் ஆட்டம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்!


அ‌ஜீத்தின் புதிய படத்தின் ஷூட்டிங் மும்பை, பெங்களூரு என்று இரு இடங்களிலும் தடைபட்டது. காரணம் மழையும், ரசிகர்களும். இந்த இடைவெளியில் ஜிம்மில் தொப்பையை கரைத்த அ‌ஜீத் படப்பிடிப்புக்கு கிளம்ப ஆர்வமாக இருக்கிறார். இந்தமுறை எக்ஸ்ட்ரா முன்னெச்சரிக்கையுடன் கிளம்புகிறார்கள்.

விஷ்ணுவர்தன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் மும்பையில் தொடங்குகிறது. மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அ‌ஜீத்துடன் ஆர்யா, நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ‌ஜீத்தின் தொப்பையில்லா கெட்டப் பார்த்து குஷியில் இருக்கும் ரசிகர்கள் அடுத்து எதிர்பார்ப்பது, படத்தின் பெயரை. விஷ்ணுவர்தனும் டீமும் நல்ல கேச்சிங்கான தமிழ்ப் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment