கமல் நடித்து, இயக்கி, தயாரித்து வந்த 'விஸ்வரூபம்' படம் தான் தற்போது இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது.
முன்னர் படத்தின் FIRST LOOKக்கை மட்டும் வெளியிட்ட கமல் படத்தின் டிரைலர் எதுவும் வெளியிடவில்லை. IIFA விழாவில் 'விஸ்வரூபம்' படத்தின் FIRST LOOK TRAILERஐ வெளியிட்டார் கமல்.
அந்த டிரெய்லரே படத்தின் பிரம்மாண்ட தயாரிப்பை உறுதி செய்வதாக அமைந்து இருக்கிறது. தீவிரவாதம், அதற்கு எதிரான போராட்டம்தான் படத்தின் கதைக்கருவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இப்படத்தினை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
IIFA விழாவில் கமல் " 13வது IIFA விழாவில், பிராந்திய மொழி படங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஷபனா ஆஸ்மி, லிவ் உல்மான் போன்றோர் உள்ள இந்த மேடையில் நானும் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். இவ்விழாவில் எனது விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிட்டதும் மகிழ்ச்சியை தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment