Wednesday, 5 December 2012
காபி ஷாப்பில் பூக்கும் கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல்
சசிகுமாரின் சென்டிமென்ட் தொடருகிறது
மேனேஜரை டிஸ்மிஸ் செய்த சந்தானம்!
அப்படித்தான் சிங்கம்-2 படத்தை இயக்கி வரும் ஹரி, சந்தானத்தின் கால்சீட்டுக்காக முதலில் அவரது மேனேஜர் புஜ்ஜிபாபு என்பவரைத்தான் அணுகியிருக்கிறார். ஆனால் தனக்கும் லஞ்சமாக ஒரு தொகையை எதிர்பார்த்த அவர், ஹரி கேட்டபடி கால்சீட் தராமல் இதோ அதோவென்று அலைய விட்டிருக்கிறார். இதனால் கடுப்பான டைரக்டர் ஹரி, இது சம்பந்தமாக சந்தானத்திடம் புகார் அளித்து விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தானம், மேனேஜரின் செயலுக்காக ஹரியிடம் மன்னிப்பு கேட்டதோடு, உடனடியாக மேனேஜரையே டிஸ்மிஸ் செய்து விட்டார். இனி என் சமபந்தப்பட்ட கால்சீட், சம்பளம் என அனைத்து டீலிங்கையும் நானே பார்த்துககொள்ளப்போகிறேன் என்றும அறிவித்திருக்கிறார்.
ஷங்கரின் ஐ படம் ஒலிம்பிக் கதையாம்!
காஜல் பின்னால் ஒரு கூட்டம்!!
அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு கருக்கரிவாள்!
இனி முன்னணி இயக்குனர்களுடன் மட்டும் தான்...! அதர்வா முடிவு
ஹன்சிகாவை விடாது துரத்தும் தனுஷ்!
இந்த நிலையில், களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அடுத்து தான் இயக்கும் சொட்டவாளக்குட்டி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை அணுகியபோது, முதலில் கால்சீட் தருகிறேன் என்று சொன்ன ஹன்சிகா, பின்னர் தனுஷ் படத்தின் நாயகன் என்றதும், சும்மாவே கடலை போடுவார், பிசியாக இருக்கிற இந்த நேரத்தில் அவருடன் நடித்தால் அடிக்கடி அல்வா கொடுக்கும் வேலையிலும் இறங்கி விடுவார் என்று அப்படத்தை தவிர்க்க வெவ்வேறு காரணங்களை சொல்லி நழுவிக்கொண்டு வருகிறார் ஹன்சிகா.
இந்த சேதி தனுசின் காதுகளுக்கு சென்றபோது, எனக்கே டேக்கா கொடுக்கிறீயா? என் படத்துக்குள்ள நீ முதல்ல கால்சீட் தரனும் என்று அம்மணியை செல்லமாக கடிந்து கொண்ட தனுஷ், நீ கால்சீட் தருவதாக சொன்னபிறகுதான் படப்பிடிப்பு தேதியே முடிவு செய்வோம். அதுவரைக்கும் டீல்தான் என்று ஹன்சிகாவுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறாராம். இதனால் தனுசிடம் மீண்டும் சிக்கவா? வேண்டாமா? என்ற பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் ஹன்சிகா.
என் இமேஜை சீனுராமசாமி மாற்றி விட்டார்- சுனைனா
இதையடுத்து, என்னாச்சு அம்மணி? ஒரு பதிலையும் காணோமே? என்று கேட்டவர்களிடம், நீர்ப்பறவை படத்தில் நடித்தபிறகு என் மீது நல்ல நடிகை என்றொரு முத்திரை விழுந்திருக்கிறது.எனது இமேஜை நல்ல நடிகையாக மாற்றி விட்டார் சீனுராமசாமி. அதனால் இனிமேல் இருக்கிற கொஞ்சநஞ்ச காலமும் இதுமாதிரி தெறமைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே ஆக்டு கொடுக்க ஆசைப்படுறேன் என்று டபாய்த்து விட்டாராம் நடிகை. இதனால் சுனைனாவை நம்பி மோசம்போன படாதிபதிகள் இப்போது வேறு நடிகைகளை தேடிச்சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆர்யா மானஸ்தன் சொல்கிறார் விஷால்!
நடிகை சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
"பிரியாணி கதை செம டேஸ்ட் : ஹன்சிகா
இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "பிரச்னை எல்லாம் சரியாகி விட்டது, பாஸ். இப்போது படத்தில் நடிப்பது பற்றித் தான், என் முழு கவனமும் உள்ளது. "பிரியாணி கதை முழுவதும் எனக்கு தெரியும். அசல் பிரியாணி மாதிரியே, பிரியாணி படத்தின் கதையும் செம டேஸ்ட்டா, இருக்கு. காமெடியும் நிறைய இருக்கு... கார்த்திக்கும், எனக்கும் உள்ள ரொமான்டிக் காட்சிகள் டக்கராயிருக்கும் என்றார். கதை குறித்து கேட்டபோது, "கதையா மூச்.. டைரக்டர் டென்ஷனாயிடுவார்... எனக்கு பிடிச்சுருக்கு... தியேட்டருக்கு வரும்போது, உங்களுக்கும் பிடிக்கும் என, கிரேட் எஸ்கேப் ஆனார்.
"யானையை மறக்க முடியவில்லை லட்சுமி மேனன்
விஜய்யின் 25வது பாடல்
பிரியாணிக்கு ஆசைப்பட்டு..!
இதுவரை 'சென்னை 28', 'சரோஜா', 'கோவா', 'மங்காத்தா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு, எல்லா படங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை மிளிரும்.
'சரோஜா', 'மங்காத்தா' இரண்டு படங்களுமே த்ரில்லர் வகையில் வெங்கட்பிரபு இயக்கிய படங்கள் தான். பிரியாணி படத்தினையும் அதே பாணியில் இயக்கி வருகிறாராம்.
கதைப்படி கார்த்தி, பிரேம்ஜி இருவருமே நெருங்கிய நண்பர்களாம். இருவரும் 'பிரியாணி' பிரியர்களாம். அதுவும் ஆம்பூர் பிரியாணி என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.
'பிரியாணி'க்கு பேர் போன ஆம்பூருக்கு போய், பிரியாணி சாப்பிட திட்டமிட்டு அங்கே போகிறார்கள். போன இடத்தில் ஒரு கொலை நடந்து, அந்த பழி கார்த்தி, பிரேம்ஜி இருவர் மீதும் விழுகிறது.
பிரியாணிக்கு ஆசைப்பட்டு, கொலை கேஸில் சிக்கிய இருவரும் அந்த பிரச்னையை சமாளித்தார்கள் என்பதையும், கொலை செய்தது யார் என்பதையும் சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.
மேலும் இரண்டு 'பிரியாணி' ஸ்பெஷல் ' தகவல்கள் :
'பிரியாணி படத்தின் முதல் பாடலை கார்த்தி, பிரேம்ஜி இருவரும் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
'செந்தூரப்பூவே' புகழ் ராம்கி, பிரியாணி மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்!
'ச்சும்மா அதிரும்' சிவாஜி 3D !
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், திடீரென திரையில் 3D-யில் தோன்றிய ரஜினி "நான் வெளியூர்ல இருக்கேன். 'சிவாஜி’ படத்தை ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் பல கோடி ரூபா செலவுல மிக பிரமாண்டமா தயாரிச்சு ரிலீஸ் பண்ணாங்க.. இப்ப படத்தை அதைவிட ரெண்டு மடங்கு செலவு செஞ்சு 3D படமா மாத்திருக்காங்க. இந்த செலவுல, 2 பிரமாண்ட படங்களே எடுத்திருக்கலாம்.. ஆனா என் பிறந்தநாள் பரிசா ரசிகர்களுக்கு இந்த 3D படத்தை ஏவி.எம். குடுத்திருக்காங்க.. இந்த படத்தை நான் 3Dல பாத்தேன்.. ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. நீங்களும் பாருங்க" என்றார்.
இயக்குனர் ஷங்கர் " சிவாஜியை 3Dல பண்ண என்ன இருக்கு.. 'எந்திரன்'லயாவது 3D பண்ண நிறைய ஸ்கோப் இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சிவாஜி படம் 3D-ல பிராமாதமா வந்திருக்கு. நான் பாத்த ஆங்கில படங்களை விட சிவாஜி பிரமாதமா இருக்கு. 3Dல படம் பார்த்தா ஏதாவது கண்ணுகிட்ட வந்து குத்தற மாதிரியே இருக்கும். ஆனா 'சிவாஜி'ல Petals ( பூ இதழ்கள் ) கண் முன்னாடி வருவது ரொம்ப அழகா இருந்தது. இதுக்கு முதல்ல பாராட்ட வேண்டியது கே.வி.ஆனந்த்தை தான். 3D பண்ண மாதிரியே பண்ணியிருக்கிறார். நான் டைரக்டராக பார்க்காம ஒரு பார்வையாளராக தான் பார்த்தேன். படம் பிரமாண்டமா வந்திருக்கு" என்றார்.
வைரமுத்து "ரசிகர்கள் 'சிவாஜி' படத்தை கொண்டாடுவார்கள். பழைய தொழில்நுட்பத்தில் தூரத்தில் இருந்த ரஜினி புதிய தொழில் நுட்பத்தால் நம் அருகில் வந்து மேலும் நெருக்கமாகிறார். ரஜினி இந்த படத்தில் மிக அழகாக தெரிகிறார். இந்த படம் தான் ரஜினியின் பிறந்தநாள் பரிசு, புத்தாண்டு பரிசு, பொங்கல் பரிசு! " என்றார்.
Dolby Atmos தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படம் 'சிவாஜி 3D' தான்.
லட்டு ரிலீஸ் : ஷங்கர்.. சிம்பு.. சந்தானம் !
சந்தானம், பவர் ஸ்டார், சேது, விஷாகா மற்றும் பலர் நடித்து இருக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தினை மணிகண்டன் இயக்கி இருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இப்படத்தினை ராமநாராயணன் வெளியிட இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 9ம் தேதி நடக்க இருக்கிறது. பாடல்களை இயக்குனர் ஷங்கர் வெளியிட, சிம்பு பெற்றுக் கொள்கிறார்.,
'பரதேசி', 'சமர்' ஆகிய படங்களுடன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது.
Subscribe to:
Comments (Atom)