முன்னணி இயக்குனர்கள் இயக்கி வரும் படங்களில் நான் தான் நாயகியாக்கும் என்ற சந்தோஷத்தில் இருந்த சமந்தாவுக்கு இப்போது ஒரு வேகத்தடை.
கெளதம் மேனன் இயக்கும் ' நீதானே என் பொன்வசந்தம்', ராஜமெளலி இயக்கத்தில் 'நான் ஈ' ஆகிய படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம், வெங்கட்பிரபு இயக்கும் 'பிரியாணி', தெலுங்கில் இரண்டு படம் என ஒப்பந்தமாகி இருக்கும் சமந்தா தேதிகள் குளறுபடியால் கடலிலிருந்து தானாக கரை ஏறிவிட்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் நடித்தால் இந்திய திரையுலகில் முக்கிய நாயகியாக வலம் வரலாம் என்று நினைத்தவர் இப்போது இந்த முக்கிய முடிவை எடுக்க வேண்டியதாகி விட்டதாம்.
No comments:
Post a Comment