
பசி திரைப்படத்தில் அப்பாவி ரிக்ஷாக்காரராக நடித்து பெயரெடுத்தவர் டெல்லிகணேஷ். தொடர்ந்து நூறுக்கணக்கான படங்களில் நடித்த அவர் தற்போது சின்னத்திரையிலும் தனது நடிப்பால் கொடிகட்டி பறந்து வருகிறார். தனது திரையுலக மற்றும் சீரியல் பயணம் குறித்து டெல்லி கணேஷ் அளித்துள்ள பேட்டியில், ராஜபார்வை படத்தின் மூலம் கமல் எனக்கு அறிமுகம் ஆனார். அவரைப் பார்த்து நான் உங்கள் ரசிகன் என்று கூறிய நேரத்தில், உடனே அவர் நான்தான் உங்கள் ரசிகன் என்று கூறியது பெருமையாக இருந்தது. வில்லனோ, காமெடியனோ என்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியவர் அவர். சினிமாவோ, சீரியலோ கவனம் செலுத்தி நடித்தால் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும் என்று கூறினார். தன்னுடைய 30 வருட சினிமா வாழ்க்கையில் தான் கற்றுக்கொண்ட பாடமும் அதுதான், என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment