
தமிழ் சினிமாவில் இது, "டுவின்ஸ் கதை சீசன். "மாற்றான், சாருலதா ஆகிய இரு படங்களும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் கதை. இந்த வரிசையில், மம்முட்டி நடிக்கும், "புதுவை மாநகரம் படமும் "டுவின்ஸ் கதைதான். கேரளாவில், "டுவின்ஸ் என்கிற பெயரில் வந்து, ஹிட்டான படம் தான், தமிழில், "புதுவை மாநகரம் ஆக தயாராகிறது. மம்முட்டியும், நதியாவும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். அவர்களின் பெற்றோர், விபத்தில் பலியாகிவிட, இருவருக்கும் அந்த சம்பவம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சாலை விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடுகிறவர்களுக்கு உதவுவதையே, தொண்டாக செய்கின்றனர். அப்படியொரு விபத்தில் சிக்கும் டாப்ஸியை காப்பாற்றுகிறார் மம்முட்டி. அதற்கு பின், பிரச்னைகள் அவரை துரத்துகிறது. மம்முட்டியை பெரிய சிக்கலில் மாட்டி விடுகிறார் டாப்ஸி. அதிலிருந்து மம்முட்டி எப்படி மீண்டு வருகிறார் என்பதை, படம் சொல்கிறது.
No comments:
Post a Comment