
நான் படத்துக்குப் பிறகு விஜய் ஆன்டனி நடிக்கும் புதிய படத்திற்கு திருடன் என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக அறிமுகமான முதல் படம் நான். அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது இந்தப் படம். படத்தை அவரே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்போது அடுத்த புதுப்படத்தைத் தயாரிக்க களமிறங்கிவிட்டார் விஜய் ஆன்டனி. இந்தப் படத்துக்கு திருடன் எனத் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். படத்தின் நாயகி உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment