Friday, 7 September 2012

சூட்டிங்கில் விபத்து! விஷால் தலையில் காயம்!!


Vishal injured at shooting spotமத கஜ ராஜா படத்திற்காக சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டைரக்டர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் மதகஜ ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. ஹீரோ விஷால், வில்லன் ஆட்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது, விஷால் தடுமாறி தலை குப்புற விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் விஷாலுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விஷாலுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், பயப்படும்படி எதுவும் இல்லை; தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. நன்றாக ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகி விடும், என்று தெரிவித்தனர். இதையடுத்து மதகஜ ராஜா படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விஷால் ஓய்வு எடுத்து வருகிறார்.

No comments:

Post a Comment