
இயக்குனர் விஜய் இயக்கத்தில், விஜய் - அமலா பால் நடிப்பில், புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் இடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு, மும்பையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தில், மற்றொரு ஹைலைட்டான விஷயமும் உள்ளது. இதில், நடிகர் விஜய், ஒரு பாடலை, பாடப் போகிறார். இந்த பாடல், அவர் சொந்த குரலில் பாடும், 25வது பாடல். ஜி.வி.பிரகாஷ் தான், இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில், ஐந்து பாடல்களாம். இதுவரை, இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்களில், ஜி.வி.பிரகாசும், விஜய்யும், தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர். விஜய்யின், 25 வது பாடல், பட்டையை கிளப்புமா என, பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment