
சசிகுமார் நடித்த படங்களில், "சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் ஆகியவை, அவருக்கு வெற்றியை கொடுத்த முக்கிய படங்கள். இந்த மூன்று படங்களுக்குமே, ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது, சசிகுமாரை சுற்றி, நான்கு நண்பர்களும் படம் முழுக்க வருவர். அதனால், இந்த நண்பர்கள் சென்டிமென்ட்டை, தான் புதிதாக நடித்து வரும், "குட்டிபுலி படத்திலும் பின்பற்றி வருகிறார் சசிகுமார். மேலும், நண்பர் கேரக்டரில் நடிப்பவர்களை, புது முகங்களாக இல்லாமல், சுந்தரபாண்டியனில் நடிக்க வைத்தது போல், ஏற்கனவே பரிட்சயமான நடிகர்களை நடிக்க வைக்கிறார். இதையடுத்தும், சசிகுமாரின் இந்த, நான்கு நண்பர்கள் சென்டிமென்ட் தொடருமாம்.
No comments:
Post a Comment