
அந்நியன் படத்திற்கு பிறகு விக்ரம்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஐ. ஐ படத்தில், ஒலிம்பிக்கை மையமாக வைத்து, கதை தயார் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். பலசாலியை விரும்புகிற ஒரு பெண்ணுக்காக, கடுமையான உடற்பயிற்சி செய்து, உடம்பை கட்டுமஸ்தாக கதாநாயகன் விக்ரம் மாற்றுவதும், அதுவே, விக்ரமை ஒலிம்பிக் வரை கொண்டு போய் விடுவது தான் கதை. இதில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு வேலையை கவனிக்கிறார். தற்போது படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2013ம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.
No comments:
Post a Comment