இந்நிலையில் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கி, அதையும் வெற்றிபடமாக்கியுள்ள முருகதாஸ் மீண்டும் அஜீத்தை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் அஜீத்தோ விஷ்ணுவர்தன் படம், சிறுத்தை சிவா படம் என்று அடுத்தடுத்த படங்களில் நடிப்பதால் முருகதாஸ்க்கு ஓ.கே., சொல்ல முடியாமல் இருந்து வந்தார். இருந்தாலும் அஜீத்துக்காக தான் காத்திருப்பதாக முருகதாஸ் கூறியதை அடுத்து இப்போது அஜீத்தும், முருகதாஸ் படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.
தற்போது முருகாதஸ் அக்ஷ்ய் குமாரை வைத்து இந்தி துப்பாக்கியை ரீ-மேக் பண்ணும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதேபோல் அஜீத்தும் விஷ்ணுவர்தன் மற்றும் சிறுத்தை சிவா படங்களில் பிஸியாக இருப்பதால் இருவரும் அவரவர் படங்களை முடித்தபின்னர் தங்களது புதிய படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை ஐயங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தாண்டு இவர்களது படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகும் என்றும், விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment