ஒரு நடிகை லிப்ஸ்ட்டிக் வாங்குனா கூட, 'யாரும்மா ஸ்பான்சர்?'னு கேட்கிற அளவுக்கு சந்தேகத்தை முழுங்கி சங்கடத்தை வாந்தியெடுக்கிற ஏரியா இது. அடையார் பகுதியில் மூன்று கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியிருக்கிறார் அமலா பால். சும்மா விடுவார்களா?
டைரக்டர் விஜய்க்கும் இவருக்கும் காதல் என்று வெளிவந்த கிசுகிசுக்களுக்கும் ஒரு முடிவு கட்டியிருக்கிறது இந்த இல்லம். கோடம்பாக்கத்திற்கே தெரிந்த இந்த கள்ளவீடு ரகசியம், விஜய்க்கு தெரியாமலா இருக்கும்? கோபத்தில் அவர் குறுகுறுக்க, நாளைக்கு கிடைக்கிற பண்ணையை விட, இன்னைக்கு கிடைக்கிற திண்ணை மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் அமலா.
ஆகமொத்தம், லவ்வு அவுட்!
No comments:
Post a Comment