கடந்த ஒன்றரை வருடமாக தெலுங்கில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் அனுஷ்கா. இதனால் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபாஸுடன் ‘வாரதி’ என ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. அவரது சினிமா கேரியரை பார்க்கும்போது தமிழைவிட தெலுங்கில் பெரிய வெற்றி படங்களை தந்திருக்கிறார். ஆனாலும் தற்போது அவர் தெலுங்கு படங்களை ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதற்கு காரணம் என்ன என்று புரியவில்லை. 30 வயதை கடந்துவிட்ட அனுஷ்கா தற்போதுள்ள இளம் நடிகைகளின் போட்டியை எதிர்கொள்வதை தவிர்க்கவே இந்த முடிவு எடுத்திருப்பார் என்று டோலிவுட் திரையுலகினர் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment