அப்படத்தினைத் தொடர்ந்து விஷ்ணு, சுனைனா நடிக்கும் 'நீர்ப்பறவை' என்னும் படத்தினை உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இயக்கி வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பிலேயே சுமார் 70% படத்தினை முடித்து விட்டார் சீனுராமசாமி. விஷ்ணு, சுனைனா, நந்திதாதாஸ், சரண்யா, இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள்.
இதுவரை முடிந்த காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனரை வெகுவாக பாராட்டினாராம். இது போன்ற படத்தினை தனது நிறுவனம் மூலம் தயாரித்தில் மிகந்த மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.
'நீர்ப்பறவை' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு ஜுன் 15ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் துவங்குகிறது. சில பாடல் காட்சிகளும் மற்றும் சண்டைக் காட்சிகள் மட்டும் தான் பாக்கி இருக்கிறதாம்.
படத்தினை ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment