கும்கி படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் கமல்ஹாசனை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். அந்த அழைப்பிதழில் இந்தியாவில் இப்படியெல்லாம் கூட அழகான பிரதேசங்கள் இருக்கின்றவா என்று கேட்க வைக்கும் அளவுக்கு வனப்பகுதிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. படக்குழுவினர் நடிகர் கமல்ஹாஸனை நேரில் சந்தித்து இந்த அழைப்பிதழைக் கொடுத்தபோது, அந்தப் படங்களையெல்லாம் ஆர்வத்துடன் பார்த்த கமல், இயக்குநர் பிரபு சாலமனை பாராட்டியுள்ளார்.
அருகில் அழைத்து தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டவர், படம் குறித்து ரொம்ப நேரம் பேசினாராம். பின்னர், நடிகர் பிரபு, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
Thursday, 26 July 2012
கமல்ஹாசனை கவர்ந்த கும்கி அழைப்பிதழ்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment