ரஜினி, கமல் இணைந்து நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படம் 1979 ஆண்டு வெளிவந்தது. பாலசந்தர் இப்படத்தினை இயக்கினார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது.
33ம் வருடங்கள் கழித்து இப்படம் மீண்டும் வெளியாகிறது. ரீமேக்காக அல்ல, பழைய படத்தினை டிஜிட்டலில் உருவாக்கி இருக்கிறார்கள்.
சிவாஜி நடித்த 'கர்ணன்' படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 100 நாட்களை கடந்தும் தற்போது வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தினை தற்போது முழுக்க சினிமாஸ்கோப், DTS தொழில்நுட்பத்தில் தயார்ப்படுத்தி இருக்கிறார்கள்.
ரஜினி, கமல் என இருவரும் சேர்ந்து நடித்த படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும் என்பது தயாரிப்பாளரின் கணக்கு.
No comments:
Post a Comment