
பாலாவின் பரதேசி படம் விரைவில் ரீலிஸ் ஆகும் என கூறப்படுகிறது. தேசிய விருது இயக்குனர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. படத்திற்கு பரதேசி என்று பெயரிட்டிருக்கிறார் பாலா. படத்தின் சூட்டிங் முழுமையாக முடிந்துள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து பாலா, படத்தை தீபாவளிக்கு முன்பே வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம். இதனால் அடுத்த மாதம் மத்தியில் பரதேசி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. பரதேசி படத்துக்கு பிறகு விஷாலை வைத்து படம் இயக்க பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.
No comments:
Post a Comment