இசை வெளியீட்டு விழாவில் படத்தின் பாடல்கள், டிரெய்லரை பார்த்தவர்கள் படம் கண்டிப்பாக வெற்றி தான் என்று விநியோகஸ்தர்கள் அனைவருமே தயாரிப்பாளர் லிங்குசாமி அலுவலகத்தினை முற்றுகையிட்டு வருகிறார்கள்.
கும்கி பாடல்கள் இளைஞர்களின் காதுகளை நிறைத்து வருகிறது. 'ஒண்ணும் புரியல', 'அய்யய்யோ ஆனந்தமே', 'சொல்லிட்டாளே அவ காதல' ஆகிய பாடல்கள் காதலர்களின் ரிங் டோனாக இருக்கிறது.
இப்படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். மைனா டீம் அப்படியே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறது.
தம்பி ராமையா பேசும் வசனங்கள் பெரிய அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் படக்குழு.
படத்தில் யானையும் கதாநாயகனும் நட்பாக இருப்பார்களாம். அனைத்து படங்களிலுமே க்ளைமாக்ஸ் காட்சிகள் நாயகனை சுற்றி தான் இருக்கும். ஆனால் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் பிரபு சாலமன், கும்கி க்ளைமாக்ஸ் காட்சியினை யானையை மையப்படுத்தி வைத்து இருக்கிறாராம்.
No comments:
Post a Comment