Thursday, 10 January 2013

சிகரம் தொட தயாராகும் யுடிவி!



’தூங்காநகரம்' படத்தினை இயக்கிய கௌரவ், தனது படத்தின் பணிகளை துவங்கி விட்டார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்திற்கு 'சிகரம் தொடு' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

யு.டிவி நிறுவனம் தற்போது ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி நடிக்கும் 'சேட்டை' படத்தினை தயாரித்து வருகிறது. ஜனவரி 31ம் தேதி இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'சேட்டை' படத்தினைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வரும் 'இவன் வேறமாதிரி' படத்தினை வெளியிட இருக்கிறது.

'சிகரம் தொடு' படத்திற்கு மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் வெள்ளித்திரையில் 'சிகரம் தொட' இருக்கிறார்கள்
.

No comments:

Post a Comment