1978ல் வெளிவந்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தினை ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா மற்றும் பலர் நடித்த அப்படத்தினை ஸ்ரீதர் இயக்க, இளையராஜா இசையமைத்து இருந்தார்.
தற்போது அப்படத்தின் ரீமேக்கில் ரஜினி வேடத்தில் தனுஷ், கமல் வேடத்தில் சிம்பு, ஸ்ரீப்ரியா வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.
ஆனால் தனுஷ், சிம்பு இருவருமே ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் பணிகள் இருப்பதால், அப்பட பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு தான் 'இளமை ஊஞ்சலாடுகிறது' ரீமேக் குறித்து யோசிக்க முடியும். இருவரும் இணையும் படமாக ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ இருக்காது.. இது வெறும் வதந்தி தான் என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.
No comments:
Post a Comment