சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் 'என் வழி தனீ வழி' என்று முழக்கமிடும் ரஜினி, கமல் விஷயத்தில் அமைதிகாப்பது ஒட்டுமொத்த திரையுலகத்தையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. 'கமல் என் நண்பன். அவருக்கு ஒரு பிரச்சனைன்னா நான் பார்த்துகிட்டு இருக்க முடியாது' என்று ஒருவார்த்தை ரஜினி வாயிலிருந்து வந்திருந்தால், மிச்சத்தை அவரது ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு ரஜினியை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் பின்னாலேயே வரப்போகிற கோச்சடையானுக்காக தப்பி தவறி கூட இந்த விஷயம் குறித்து வாயை திறக்காத ரஜினி மீது கமலுக்கு கோபம் இருந்திருக்கலாம். அதனால்தான் இப்படி ஒரு பஞ்ச் டயலாக்கை மிக திட்டமிட்டு பேசியிருக்கிறார் அவரும்.
கூரையில சோறு வச்சா ஓராயிரம் காக்கா... என்றொரு பழமொழி உண்டு. போராடி கமல் திறந்து வைக்கப் போகும் இந்த பூங்காவுக்குள் காற்று வாங்க வரப்போகும் கமலின் பின்னோடி திரையுலக தோழர்களுக்கு பெருத்த சாபம் காத்திருக்கிறது ஆழ்வார்பேட்டை முகவரிக் காரரிடமிருந்து!அதுமட்டும் நிச்சயம்...
No comments:
Post a Comment