Tuesday, 26 June 2012

விஷால் படம் வேணாம்... ஃபினிஷிங் கொடுத்த பிரணிதா


Pranithaகுல்பி, ரசகுல்லா, மல்டிலெவல் மல்கோவா என்று எத்தனை பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அத்தனைக்கும் பொருத்தமான 'சகுனி' பிரணிதா, எடுத்து வைக்கிற ஸ்டெப்புகள் எதுவும் பொருத்தமாக இல்லையே என்று உதட்டை பிதுக்குகிறார்கள் சினிமாக்காரர்கள்.
சினிமாவுக்கே சம்பந்தமில்லாத இரண்டு நபர்களைதான் இவர் தனது மேனேஜராக வைத்திருக்கிறார். அந்த இருவரும் கொடுக்கிற ஐடியாக்களும், வழி காட்டுதலும் பிரணிதாவுக்கு செய்யப்படும் 'நோ என்ட்ரி' போர்டுகள்தானே தவிர வேறு இல்லை என்கிறார்கள் இதே ஏரியாவில். இந்த இருவரில் ஒருவர் பிரணிதாவின் நெருங்கிய சொந்தக்காரராம். இவர் சொல்படி கேட்க ஆரம்பித்திருக்கும் இந்த குல்பி சமீபத்தில் மறுத்த படம் எது தெரியுமா?
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'மதகஜராஜா' படத்தைதான். 'அஞ்சலி என்ற குடும்ப குத்துவிளக்கையே குத்து டான்ஸ் போட வச்சவரு சுந்தர்சி. அது மட்டுமா? 'கலகலப்பு' படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சியை வாரியிறைத்து அஞ்சலியின் நற்பெயரில் கரியை தடவியவர் ஆச்சே' என்றெல்லாம் பற்ற வைத்தார்களாம்.
'அப்படியா' என்று தனது கண்களை இன்னும் சில செ.மீட்டர்கள் விரித்து கவலைப்பட்ட பிரணிதா, 'ஸாரி சார். வேற ஆளைப்பாருங்க' என்று சுந்தர்சியிடம் சொல்ல, 'ரீசன்ட்டா ஒரு மெகா ஹிட்டு கொடுத்த நமக்கேவா?' என்று அதிர்ச்சியானாராம் அவர்.
வேப்ப மரத்துல வெத்தலை கொடி படர்ந்தா மாதிரிதான் அமையுது எல்லாமே! என்ன செய்யப்போகிறாரோ அப்பாவி பிரணிதா?

பில்லா 2 படத்தின் பெயர் மாற்றப்படுமா?



  பில்லா 2 படத்தை இரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்தாலும் கூட,கடைசி வரை இரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் தவித்து வந்த பில்லா 2 படக்குழு இறுதியில் வரும் ஜூலை 13 ஆம் தேதி இப்படத்தை வெளிவிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதனால் இரசிகர்கள் சற்று திருப்தி அடைந்தாலும், மேலும் ஒரு சர்ச்சையாக இப்படமானது பெயர் மாற்றத்துடன் வெளிவரவுள்ளது என்ற செய்தி இரசிகர்களிடையே இப்படம் பற்றிய எதிர்பார்ப்பை சற்றே குழப்பமடைய வைத்துள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் முதல் படம் என்ற பெருமையை எட்டவுள்ள இப்படம் பற்றிய சர்ச்சைகள் இப்படம் வெளிவரும்வரை ஓயப்போவதில்லை.

பில்லா 2 என்றே தெலுகுவில் வெளிவரவுள்ள இப்படத்திற்கு தமிழிலும் அதே பெயரிலே வெளியிட ஆரம்பத்தில் முடிவெடுக்கப்பட்டது.ஆனால் இப்போது புதுக் குழப்பமாக இப்படத்தில் வரும் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயரான டேவிட் என்ற பெயரையும் சேர்த்து டேவிட் பில்லா என்று பெயர் சூட்ட விரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக பில்லா படக்குழுவை நாம் அணுகியபோது, இது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும், ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் திரையிடப்படும் எனவும் தெரிவித்தனர்.

கடந்த வருடம் ஜூலை 14 ஆம் தேதி ஆரம்பித்த பில்லா 2 படப்பிடிப்பு வேலைகள் முடிந்திருந்தாலும் கூட இப்படத்தை காண இன்னும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்க வேண்டும் என்பதே இரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

அதிவேகமாக பைக் ஓட்டும் மச்சான்ஸ் நடிகை.




சிறுத்தை நடிகரின் சகுனி ஆட்டம் நன்றாக போய்க் கொண்டிருப்பதில் அவருக்கு ஏக மகிழ்ச்சி. இப்படத்தை விட சூப்பர் ஹிட் கொடுக்கும் படம்தான் பாண்டி அலெக்ஸ் என்கிறார் சிறுத்தை நடிகர். இப்படத்தில் காட்சியும் பிரமாண்டம், திரையில் நீங்கள் காணப்போவதும் பிரமாண்டம் என்று சிறுத்தையானவர் பார்ப்பவர்களிடம் எல்லாம் சிலாகித்து வருகிறாராம்.

இப்பொழுது அவ்வளவாக படவாய்ப்புகள் இன்றி முழு ஓய்வில் இருக்கிறார் மச்சான் நடிகை. இருந்தாலும் அவ்வப்போது கடை திறப்பு விழா, வெளிநாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பணம் சம்பாதித்து வருகிறார். 

இவருக்கு பைக் ஓட்டுவதென்றால் ரொம்பவும் பிடிக்குமாம். அதுவும், அதிவேகமாக பைக்கில் பறப்பது என்றால் மிகவும் பிடிக்குமாம். இதனால் ஓய்வு நேரங்களில் அவரது சொந்த ஊரில், வீதிகளில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பைக்கில் சீறிப் பாய்கிறாராம். 

நீங்களும், அவர் சொந்த ஊரில் இருக்கிறீர்களா? பார்த்துச் செல்லுங்கள். எதிர்வரும் பைக்கில் சீறிக் கொண்டு வருபவர் உங்கள் மச்சான் நடிகையாகக்கூட இருக்கக்கூடும்.

பாப்பா.. தள்ளிப் போய் விளையாடு! ஏ.ஆர்.முருகதாஸின் டுவிட்


விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. பூனேவில் 'துப்பாக்கி' படப்பிடிப்பு நடந்து வருகிறது.


ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த விஜய், தற்போது பூனேவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பூனேவில் லோனாவாலா இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து விட்ட நிலையில், பரபரப்பாக இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று பாடல்கள் மட்டுமே காட்சிபடுத்த வேண்டியிருக்கிறதாம்.

ஜுலை மாதத்தில் 'துப்பாக்கி' படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு "இந்த ஆண்டை 'மாற்றான்' ஆளப் போகிறது.. மற்றவர்கள் தள்ளி இருங்கள்.. SURIYA = CLASS + MASS"  என்று டிவிட்டர் இணையத்தில் ஒருவர் தெரிவிக்க, அதற்கு முருகாதஸின் பதில் " பாப்பா தள்ளி போய் விளையாடு!" என்பது தான்!

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து சேரன் ஆலோசனை




பொக்கிஷம் திரைப்படத்துக்குப் பிறகு இயக்கத்திற்கு பதிலாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சேரன். தற்போது வசந்த் இயக்கத்தில் "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் நடித்து வரும் இவர், மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.

படத்துக்கு "ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' என்ற பெயர் சூட்டியுள்ளார். "180' படத்தில் நடித்த நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநராக மட்டும் இருக்கலாமா இல்லை நடிக்கலாமா என நல விரும்பிகளுடன் ஆலோசனை செய்துவருகிறார் சேரன்.

எதிர்பார்க்கும் தொகை கிடைக்காவிட்டால், உலகம் முழுவதும் விஸ்வரூபத்தை ரிலீஸ் செய்ய கமல் முடிவு.



 
தமிழிலும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் தயாராகும் "விஸ்வரூபம்' கதையை ஏழு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய கமல்ஹாசன், தன்னுடைய மற்ற பட வேலைகளுக்கு மத்தியில் அந்தக் கதையை சிறிது சிறிதாக மெருகூட்டி தற்போது முழு படத்தையும் முடித்திருக்கிறார். இதில் கமல், கதக் நடனக் கலைஞராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அது தவிர, தீவிரவாதி உள்பட இன்னும் சில கெட்-அப்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை ஆரம்பத்தில் கமல்ஹாசனின் "ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் ரூ.60 கோடியில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் மேலும் பல கோடிகளுக்கு எகிறவே பி.வி.பி. சினிமா நிறுவனத்தையும் தயாரிப்புப் பணியில் இணைத்துக்கொண்டார் கமல்ஹாசன். அதே போல் ஆரம்பத்தில் படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் பிலிம், டிஜிட்டல் கேமிராக்களில் படமாக்குவது குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவன் விலகவே டைரக்ஷன் பொறுப்பை கமல் ஏற்றுக்கொண்டார்.
இந்தப் படத்துக்கு கதாநாயகியைத் தேடியது போல கமல் தன்னுடைய முந்தைய படங்களுக்குக் கதாநாயகியைத் தேடியிருப்பாரா என்பது சந்தேகம்தான். முதலில் தீபிகா படுகோனே நடிப்பதாக அறிவித்தார் கமல். ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரால் தேதி ஒதுக்க முடியவில்லை. அதன் பிறகு பிரபல ஹிந்தி நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூரை கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் சில முக்கியமான காட்சிகளில் முகத்தில் மெச்சூரிட்டி தெரியவில்லை என்பதற்காக அவரையும் தவிர்த்துவிட்டார். அடுத்து கத்ரினா கைஃப், சோனாக்சி சின்ஹா, சமீரா ரெட்டி, வித்யா பாலன், பிரியா ஆனந்த், அனுஷ்கா என பல முன்னணி நடிகைகளைப் பரிசீலித்து இறுதியில் பூஜா குமார் கதாநாயகியாக நடிப்பார் என அறிவித்தார் கமல்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பூஜா குமார் அமெரிக்காவில் வசித்து வருகிறார். "காதல் ரோஜாவே' என்ற தமிழ்ப் படம் உள்பட சில ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட பூஜா குமார் பிரபல விளம்பர மாடலும் கூட. பரதநாட்டியம், கதக், குச்சுபுடி நடனங்களை முறையாகக் கற்றவர் என்பதால் நாயகி வாய்ப்பு இவருக்கு எளிதில் கைகூடியது.
பூஜா குமாரைத் தவிர இஷா ஷெர்வானி, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அதோடு சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான சேகர் கபூர் முதல்முறையாக இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். இவர் தவிர பாலிவுட்டின் பிரபலங்கள் ராகுல் போஸ், ஜெய்தீப் அஹ்லாபத், சாம்ராட் சக்ரவர்த்தி, ஜரீனா வகாப், அதுல் திவாரி ஆகியோருடன் நம்மூர் நாசரும் நடித்துள்ளார்.
தமிழ்ப் பதிப்பின் பாடல்களை கமல்ஹாசனும் கவிஞர் வைரமுத்துவும் எழுதியுள்ளனர். வைரமுத்து எழுதிய ஒரு பாடலால் வெகுவாகக் கவரப்பட்ட கமல்ஹாசன், அவருக்கு எரிமலைக் குழம்புகளால் செய்யப்பட்ட அரிய வகை பேனாவைப் பரிசளித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். ஹிந்திப் பதிப்பின் பாடல்களை பிரபல ஹிந்தி கவிஞர் ஜாவித் அக்தர் எழுதியுள்ளார். சங்கர் இசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளனர். சானு வர்கீஸ் ஒளிப்பதிவுக்கும் மகேஷ் நாராயணன் படத்தொகுப்புக்கும் பொறுப்பேற்றுள்ளனர்.
"விஸ்வரூபம்' படத்தில் சர்வதேச புலனாய்வு தொடர்பான பல விஷயங்கள் இடம்பெறுவதால் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் முக்கியக் காட்சிகள் அமெரிக்கா, கனடா, ஜோர்டான் ஆகிய நாடுகளில் இதுவரை யாரும் படமாக்கியிராத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. சென்னை, மும்பை ஆகிய இடங்களில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை இந்தியப் படங்களில் இடம்பெற்றிராத அமெரிக்க ராணுவக் காட்சிகள் "விஸ்வரூபம்' படத்தில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளன. இதற்காக அமெரிக்க ராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் பல தகவல்களைத் திரட்டியிருக்கிறார் கமல். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் முகாமிட்டிருந்த அமெரிக்க அணுசக்தி கப்பலான யு.எஸ்.கார்ல் வின்ஸ் கப்பலில் நடைபெற்ற விருந்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டார். அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றில் நடந்த விருந்துக்கு அழைக்கப்பட்ட முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார் கமல்.
உலகம் முழுவதும் வசூலில் பெரும் சாதனை படைத்த "த லார்ட் ஆஃப் த ரிங்ஸ்', "மேட்ரிக்ஸ்', "ஸ்பைடர்மேன்' போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் "விஸ்வரூபம்' படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட அகாதெமி விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் ரூ.120 கோடிக்கு அதிகமாக இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.
எதிர்பார்க்கும் தொகைக்கு விற்பனையாகாவிட்டால் கமல்ஹாசனே உலகம் முழுவதும் படத்தை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. தமிழ்ப் படங்களை இந்திய எல்லையைத் தாண்டி சர்வதேச எல்லைக்குள் முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் முக்கியமானவரான கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடைய மெகா எதிர்பார்ப்பை எற்படுத்தியிருக்கிறது.

பிரேம்ஜியை காதலிக்கவே இல்லை! நடிகை பியா


Piaa denies love with premji amaran     நடிகர் பிரேம்ஜியை நான் காதலிக்கவே இல்லை. அவராகவே என்னைக் காதலிப்பதாக சொல்லிக் கொள்கிறார், என்று நடிகை பியா கூறியுள்ளார். பொய் சொல்ல போறோம், ஏகன், கோவா, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். கோவா படத்தில் பியாவுடன் பிரேம்ஜியும் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசு பரவியது. பியாவை காதலிப்பதாக பிரேம்ஜி வெளிப்படையாகவும் அறிவித்தார். நானும் பியாவும் காதலிக்கிறோம் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை பியா இதை மறுத்து ஒரு மறுப்பு செய்தி வெளிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கும் பிரேம்ஜிக்கும் காதல் என்பதெல்லாம் பொய். இதுபோன்ற கிசுகிசுக்கள் பரவுவதற்கு பிரேம்ஜிதான் காரணம். இண்டர்நெட்டில் என்னைக் காதலிப்பதாக அவர் செய்தி வெளியிட்டதால் எனக்குத்தான் பிரச்னையாகிவிட்டது. அந்த செய்தியை நீக்கும்படி பிரேம்ஜியிடம் வற்புறுத்தினேன். அதற்குள் அந்த செய்தி பரவி விட்டது. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளானேன். பிரேம்ஜி பற்றி வெங்கட்பிரபுவிடம் கூட புகார் கூறினேன். பிரேம்ஜியை நான் காதலிக்கவே இல்லை, அவராகவே என்னைக் காதலிப்பதாக சொல்லிக் கொள்கிறார் நல்ல கதையாக தேடி வருகிறேன். இப்போதைக்கு சட்டம் ஒரு இருட்டறை படத்தில் மட்டும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.