Wednesday, 4 July 2012

தமிழ் படத்தில் சஞ்சய் தத்!


       ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்கள் ஆகும் வரிசையில் ரவி.கே.சந்திரன் தன்னையும் இணைத்துள்ளார்.

தனது முதல் படத்தின் நாயகனாக ஜீவாவை தேர்வு செய்து இருக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இப்படத்தினை 'கோ', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த R.S.Infotainment நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகக் இருக்கிறார் சஞ்சய் தத். ஏதோ இரண்டு அல்லது மூன்று காட்சிக்கு வருவார் என்றில்லாமல், படம் முழுக்க வருவது போன்ற ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்திய திரையுலகின் முக்கிய ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் என்பதால் உடனே ஒ.கே கூறி விட்டாராம் சஞ்சய் தத்.

நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

' கோச்சடையான் ' ஸ்பெஷல் செல்போன்!


ரஜினியின் முழுக்கவனமும் இப்போது 'கோச்சடையான்' படத்தின் மீது தான் இருக்கிறது.

'கோச்சடையான்' படத்தினை தீபாவளிக்கு திரையிட அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால், படம் தீபாவளிக்கு வருவது சாத்தியமில்லை என்று செய்திகள் வெளிவந்தன.

'கோச்சடையான்' படத்தினை தயாரித்து வரும் ஈராஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில் " கோச்சடையான் படத்தின் டிவி உரிமையை ஜெயா டிவி வாங்கி இருக்கிறது. தெலுங்கு உரிமை லட்சுமி கணபதி பிலிம்ஸிடம் இருக்கிறது.

'கோச்சடையான்' படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராப், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டோக்கியோவில் நடைபெறும். லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் படத்தின் பிரிமியர் காட்சி நடத்த தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் KARBON மொபைல்ஸ் உடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. KARBON இப்பட வெளியீட்டை கொண்டாடும் வகையில் 5 லட்சம் 'கோச்சடையான்' மொபைல் போன்களை வெளியிட உள்ளது. அத்துடன் மேலும் பல சிறப்புப் பரிசுகளையும் வழங்க இருக்கிறது.

படம் இவ்வருட இறுதியில் வெளிவரும் " என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

'கோச்சடையான்' 12-12-12 ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளிவருமோ?

ஐந்து நிமிட பாடலுக்கு ஆட 15 கோடி சம்பளம் வாங்கிய சூப்பர் ஸ்டார்!


    பிரபல இந்தி நடிகர் அமீர்கானின் தலாஷ் இந்திப்படத்தில் ரஜினி ஒரு பாடலுக்கு ஆடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி இதில் ஆடினால் படத்துக்கு உலகம் முழுவதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்றும், இதனால் படத்தை பெரும்தொகைக்கு விற்கலாம் என்றும் திட்டமிட்டு அவரை அமீர்கான் அணுகி வற்புறுத்துவதாகவும் ரஜினியும் ஆட சம்மதித்து விட்டதாகவும், இந்திப்பட உலகில் கிசுகிசுக்கின்றனர்.
இதில் ரஜினியுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் போன்றோரும் ஆட உள்ளதாக கூறுகின்றனர். இந்த பாடலுக்கு ஆடுவதற்காக   ரஜினிக்கு மட்டும் ரூ.15 கோடி சம்பளம் என்கின்றனர்.

நடிகை கார்த்திகாவின் அதிர வைக்கும் பழைய தோற்றம்! (பட இணைப்பு)

   தமிழ் சினிமா மேக்கப் பாய்ஸ் க்கு நிச்சயம் சல்யூட் போட்டுத்தான் ஆக வேண்டும்…!
கார்த்திகாவின் முன்னைய நாள் தோற்றத்தை பாருங்கள்…!
எப்படி பட்டி…. ரிங்கரிங் செய்து திரையில் காட்டியிருக்கிறார்கள்…!
இதையும் பாருங்க…!

உடம்பை ஏற்றி, இறக்க விக்ரமிற்கு 3 மாதங்கள் கெடு கொடுத்த ஷங்கர்.


படத்திற்கு படம் தன்னை இயக்குனர்கள் வித்தியாசமாக காட்ட நினைக்கிறார்களோ இல்லையோ, தன் கெட்டப்புக்கும் கேரக்டருக்கும் மெனக்கெடுவார் விக்ரம்.

'தெய்வத்திருமகள்' படத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள சிறு குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தவர் 'தாண்டவ'த்தில் ஆக்ஷன் அவதாரத்தில் தோன்ற இருக்கிறார்.

தாண்டவத்தினை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் நடிக்க இருக்கிறார்.

'ஐ' படத்தில் விக்ரமிற்கு பல்வேறு கெட்டப்புகள் இருக்கிறதாம். முதல் பாதி படத்தில் விக்ரம் மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டுமாம். பிற்பாதியில் உடம்பை மிகவும் ஏற்றி இருக்க வேண்டுமாம்.

இதற்காக ஷங்கர் முதலில் விக்ரம் ஒல்லியாக இருக்க வேண்டிய காட்சிகளை அனைத்தையும் காட்சிப்படுத்தி விட்டு, மூன்று மாத காலம் விக்ரமிற்கு பிரேக் கொடுத்திருக்கிறாராம். அதற்குள் விக்ரம் உடம்பை அடுத்த பாதிக்கு ஏற்றபடி தயார் செய்து கொள்ள வேண்டுமாம்.

சீனாவில்' ஐ' படத்திற்காக கிட்டத்தட்ட 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். சமந்தா விலகியதை அடுத்து ஏமி ஜாக்சன் நடிக்கலாம் என்று செய்திகள் உலா வருகின்றன.

தம்பியுடன் ஆட்டம் போட்ட ப்ரணிதா, அண்ணன் சூர்யாவுடன் துப்பறிகிறார்.


மாற்றான்' படத்தினைத் தொடர்ந்து 'சிங்கம் 2' படத்திற்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. 'சிங்கம் 2' படத்தினை அடுத்து தேதிகள் கொடுத்து இருக்கும் படம் 'துப்பறியும் ஆனந்தன்'.

இப்படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கூடி இருக்கிறது. 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' வெற்றிக் கூட்டணியான கெளதம் மேனன் - சூர்யா மீண்டும் இணைவது தான் இதற்கு காரணம்.

இப்படத்தினை கௌதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அமையும் ஆக்ஷன் படம் இது. விஜய்யை வைத்து கௌதம் மேனன் இயக்கும் 'யோஹன்' முடிந்ததும், இப்பட படப்பிடிப்பு தொடங்குகிறது.

படத்தின் நாயகி வேடத்திற்கு கடும் போட்டி நிலவியது. தற்போது அப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார் ப்ரணீதா.

தம்பி கார்த்தியுடன் சகுனி ஆட்டம் ஆடியவர், அண்ணன் சூர்யாவுடன் துப்பறிய இருக்கிறார்.

நடன இயக்குனரின் புதிய காதலி?


நடன இயக்குனர், நயன நடிகையை காதலித்து அவருடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி, பின்னர் அவரை கழற்றிவிட்ட கதை அனைவரும் அறிந்ததே. இப்போது இயக்குனருக்குள் புதிய காதல் உருவாகியிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அவருடைய புதிய காதலியும் ‘சம’ கால நாயகிதான். தெலுங்கு பட உலகை கலக்கிக் கொண்டிருக்கும் அந்த நடிகை, ஒரு புதிய தமிழ் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும், நடன இயக்குனருக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டதாக பரவலாக பேசப்படுகிறது.

தமிழ் சினிமா உலகில் வெயில் பட இசையமைப்பாளரான இசை இளவலின் கையில் தற்போது ஏகப்பட்ட தமிழ்ப்படங்கள் இருக்கின்றன. இருப்பினும் இந்தியின் மேல் தணியாத தாகம் கொண்டிருக்கிறார். இந்தி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாராம். கிடைத்ததும் அங்கேயும் தனது வரவை அழுத்தமாக பதிக்க காத்திருக்கிறாராம் இசை இளவல்.