Wednesday, 18 July 2012

நான் ஈயை பாராட்டிய அஜீத். நேரடி தமிழ்ப்படம் எடுக்க ராஜமெளலி திட்டம்.


Ajith appreciate the movie Naan ee

    இப்போதெல்லாம் 'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலியை போனில் யாராவது அழைத்தால், பல நேரங்களில் அவரது எண் பிஸியாக இருக்கிறது.

காரணம் ஒட்டுமொத்த தென்னந்திய திரையுலகமும் படத்தினை பார்த்து விட்டு அவரது எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து புகழ்ந்து தள்ளுகிறார்களாம்.

பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரஜினி, இயக்குனர்கள் ராம் கோபால் வர்மா, விநாயக், பூரி ஜெகந்நாத், ஹரிஸ் சங்கர், க்ரிஷ், பிரகாஷ் ராஜ், நந்தினி, லிங்குசாமி, ஷங்கர் சார் என அனைவருமே படம் பார்த்துவிட்டு ராஜமெளலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் இன்னொரு ஸ்டாரும் சேர்ந்திருக்கிறார். அவர் அஜீத். தமிழ்நாட்டில் ' நான் ஈ ' படம் பட்டிதொட்டியும் எங்கும் ஹிட்டடித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், அஜீத்தின் பாராட்டு ராஜமௌலிக்கு மேலும் தெம்பூட்டியிருக்கிறதாம்.

'நான் ஈ' படத்தினை பார்த்த அஜீத், இயக்குனர் ராஜமெளலியை தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளி விட்டாராம்.

தமிழில் இந்த கிராஃபிக்ஸ் ஈ வரவேற்பைப் பெற்றிருப்பதால், அடுத்த படம், அநேகமாக நேரடித் தமிழ் படமாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் தகவல். படத்தின் நாயகன்? 'நான் ஈ' இசையை வெளியிட்டாரே அவர் தானாம்.!

நண்பனில் ஏற்பட்ட நட்பு தொடர்கிறது. முகமூடி இசையை வெளியிடுகிறார் விஜய்.




      தமிழ்த் திரையுலகில், கதாநாயகர்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் இருப்பது போல், இயக்குனர்கள் சிலருக்கும் ரசிகர் வட்டம் உள்ளது. அத்தகைய இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் என இவரது படங்கள் அனைத்துமே இவருக்கு பல தரப்பில் இருந்து ரசிகர்களை சேர்த்து இருக்கிறது.
இவரது இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ கதை 'முகமூடி' என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.
ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், நாசர் என ஒரு திரைப் பட்டாளமே நடிக்க, 'யுத்தம் செய்' படத்திற்கு இசையமைத்த ' கே ' இசையமைத்து இருக்கிறார். தங்களது முதல் பிரம்மாண்ட தயாரிப்பாக 'முகமூடி' படத்தினை தயாரித்து இருக்கிறது யு.டிவி நிறுவனம்.
'முகமூடி' படத்தின் FIRST LOOK வெளியான போதே படத்திற்கு எதிர்ப்பார்ப்பு ஆரம்பித்தித்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 20ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. விஜய் இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்கிறார்.
மிஷ்கின் படங்கள் என்றாலே படத்தில் மஞ்சள் கலர் சேலை கட்டிக் கொண்டு, ஒரு பெண் ஆடுவது போன்று ஒரு குத்துப்பாடல் இருப்பது வழக்கம். 'கத்தாழக் கண்ணாலே', 'வாள மீனுக்கும்' போன்ற பாடல்கள் இவரது படத்தில் இடம்பிடித்து, பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
ஆனால் 'முகமூடி' படத்தில் அவ்வாறு குத்துப் பாடல் எதுவுமே இல்லையாம். அதற்கு பதிலாக TASMAC பாரில் ஒரு பாடல் இடம் பெற்று இருக்கிறதாம்.

விஷ்ணுவர்த்தனுக்காக சிக்ஸ்பேக் உடல் தோற்றத்திற்கு மாறும் அஜீத்?




அஜீத்தின் 'பில்லா-2' படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்துக்கு பின் அவர் விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆர்யாவும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மும்பை, ஐதராபாத் பகுதிகளில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் நடிக்க உடல் எடையை குறைத்து, 'சிக்ஸ்பேக்' தோற்றுக்கு மாறும்படி அஜீத்திடம் விஷ்ணுவர்த்தன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அஜீத் தினமும் ஜிம் போகிறார். கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கிறார். தினமும் பலமணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவதாக விஷ்ணுவர்த்தன் தெரிவித்தார். தற்போது அஜீத்தின் தோற்றப் பொலிவு பிரமாதமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tuesday, 17 July 2012

மாற்றான்… சுட்ட படமா, சுடாத படமா…?



பிரிட்டனில் உருவாகவுள்ள யோஹன் முதல் பாகம்


இளையதளபதி விஜய் நடிக்க உள்ள யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் முதல் பாகம் பிரிட்டனில் உருவாக உள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகையொருவரை படக்குழுவினர் தேடி வருகின்றார்கள்.

யோஹன் என்ற பெயர் சர்வதேச அளவில் உள்ள பெயர் என்பதாலும் படத்தின் கதைப்படி விஜய் சர்வதேச உளவாளியாக நடிக்கிறார் என்பதாலும் படம் முழுவதும் அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாக உள்ளது.

கதாநாயகி தவிர, வெளிநாட்டில் நடைபெறுவது போல கதை இருப்பதால் படத்தில் நடிக்க வெளிநாட்டு நடிகர், நடிகைகளிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மேலும் யோஹன் படம் பல்வேறு பாகங்கள் அடங்கியது என்பதால் முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்கள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் யோஹன் முதல் பாகம் பிரிட்டனில் தயாராக இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

'துப்பாக்கி வேறு... கள்ளத்துப்பாக்கி வேறு... தடையை நீக்குங்கள்' - தாணு கோரிக்கை


Thaanu Files Petition Revoke Ban On
விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்துள்ளார்.

நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் என்ற நிறுவனம் கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறது.

2009-ம் ஆண்டே இந்தப் படத்துக்கு தலைப்பை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு இந்த ஆண்டு துப்பாக்கி என்று பெயர் சூட்டினர்.

இதைத் தொடர்ந்து சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கள்ளத்துப்பாக்கி பட தயாரிப்பாளர்கள், 'விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியான துப்பாக்கி என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். இந்த தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், துப்பாக்கி என்ற தலைப்பில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த ஜுன் 27-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், தடையை நீக்கக்கோரி சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "தலைப்பின் பின்பகுதி அல்லது முன்பகுதியை பிறர் பயன்படுத்தக்கூடாது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. சிங்கம், ஈ, சிறுத்தை ஆகிய படங்கள் வெளியானது. சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன், நான் ஈ, நெருப்பு ஈ, சிறுத்தைபுலி என்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதுபோல் ஏராளமான உதாரணங்களை கூறலாம்.

மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்றும், நான் துப்பாக்கி என்றும் பதிவு செய்துள்ளோம். இதில் கள்ளத்துப்பாக்கி என்றால், உரிமம் பெறாத துப்பாக்கி என்று அர்த்தம். எனவே தலைப்பில்கூட அர்த்தம் வித்தியாசப்படுகிறது. மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே துப்பாக்கி என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.

முகமூடி ஆடியோவை வெளியிடும் விஜய் - புனித் ராஜ்குமார்!



Puneet Rajkumar Is The Chief Guest
முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜூலை 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்.

ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ் கர்னாட் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள படம் முகமூடி. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரி தமிழில் உருவாகும் முழுநீள சூப்பர் ஹீரோ கதை இது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஜூலை 20-ம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் நடக்கும் இந்த விழாவில், கன்னடத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் பங்கேற்கிறார். முகமூடி ஆடியோ சிடியை நடிகர் விஜய் வெளியிட, புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்கிறார்.

புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு சென்னையில் பங்களாவே உள்ளது. இங்கே சில காலம் தங்கியும் இருக்கிறார் புனித். ஆனால் தமிழ் சினிமா விழாவில் அவர் பங்கேற்பது, அநேகமாக இதுதான் முதல்முறையாக இருக்கும்.

சமீபத்தில் புனித் ராஜ்குமாரின் ஜாக்கி, அன்னா பாண்ட் போன்ற படங்கள் சென்னையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.