Thursday, 19 July 2012

ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது கமலின் விஸ்வரூபம்?


ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது கமலின் விஸ்வரூபம்?        இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்களில் ஒன்றான கமல்ஹாஸனின் விஸ்வரூபம், ரம்ஜான் ஸ்பெஷலாக வரும் என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.



கமல்- பூஜா குமார்-ஆன்ட்ரியா உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படம் விஸ்வரூபம். ஒரு ஆண்டுக்கும் மேலாக கமல்ஹாஸன் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.

பிவிபி சினிமாஸுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் சிறப்புக்காட்சி இந்த ஆண்டு ஐஃபா விழாவில் திரையிடப்பட்டது. படத்தின் முன்னோட்டக்காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளன.

இந்தப் படம் இந்த மாதம் வெளியாகக் கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் பாடல்களே வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த மாற்றான், துப்பாக்கி படங்கள் தள்ளிப் போய்விட்டன. எனவே ஆகஸ்ட் மூன்றாவது வாரம் விஸ்வரூபம் படம் வெளியாகக்கூடும் என விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

Wednesday, 18 July 2012

காத்திருந்து ஏமாந்த விஜய், முருகதாஸ்


    கள்ளத்துப்பாக்கி படத்தின் இயக்குனரும், தயா‌ரிப்பாளரும் துப்பாக்கிப் படத்தின் டைட்டிலுக்கு தடை கோ‌ரி நீதிமன்றம் சென்றதும், துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்த இடைக்கால‌த் தடை விதிக்கப்பட்டதும் ஐந்து முதலமைச்சர்களை சினிமாவிலிருந்து தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கு நன்கு தெ‌ரிந்திருக்கும். துப்பாக்கி சார்பில் எதிர்மனு கொடுக்கப்பட்டது. துப்பாக்கி வேறு கள்ளத்துப்பாக்கி வேறு என்று தயா‌ரிப்பாளர் தாணு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இன்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.

எப்படியும் தடை நீக்கப்படும், படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஹீட்டரை பொருத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் முருகதாஸ்.

ஆனால் தீர்ப்பை19ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி. தடை நீங்கும் தடபுடலாக விளம்பரத்தை ஆரம்பிக்கலாம் என்றிருந்த விஜய், முருகதாஸ், தாணு முக்கூட்டணிக்கு இந்த தள்ளிவைப்பு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

தூத்துக்குடி டு தென்னாப்ரிக்கா!


'மாற்றான்' படத்தினை முடித்து விட்ட சூர்யா, ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சிங்கம் 2' படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

'சிங்கம்' படம் முடியும் காட்சியிலிருந்து 'சிங்கம் 2' துவங்குகிறது. 'சிங்கம்' படத்தின் கதைப்படி பிரகாஷ் ராஜ் இறந்து விட்டதால் 'சிங்கம் 2'வில் அவர் இடம் பெறவில்லை.

அவரைத் தவிர மற்ற அனைவரும் 'சிங்கம் 2' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஹன்சிகா, சந்தானம், வில்லனாக முகேஷ் ரிஷியும் கூடுதலாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

படத்தில் ஒரே சூர்யா இருவேறு பரிமாணங்களில் நடிக்க இருக்கிறாராம். தொடர்ச்சியாக 105 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர் ஹரி.

ஹரி முதல் முறையாக இப்படத்தின் காட்சிகளுக்காக தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறார். இதுவரை பாடல்களை மட்டுமே வெளிநாட்டில் படம்பிடித்து வந்தார்.

இப்படம் குறித்து இயக்குனர் ஹரி " சூர்யா 2 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். அனுஷ்கா தொழில் அதிபரின் மகளாகவும், ஹன்சிகா கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். விவேக் முக்கிய வேடத்தில் வருவார்.

'சிங்கம்' படத்தில் நடித்த மனோரமாவும் இரண்டாம் பாகத்தில் பங்கு பெறுகிறார். அவர் இப்போது பூரண குணம் அடைந்து விட்டார். உடல் நலம் தேறியபின், அவர் நடிக்கும் படம் இதுதான்.

மும்பையைச் சேர்ந்த முகேஷ் ரிஷியும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். தூத்துக்குடி பின்னணியில் கதை நடப்பதால், பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கு நடைபெற இருக்கிறது.

தூத்துக்குடியில் ஆரம்பிக்கும் படம் தென் ஆப்பிரிக்காவில் முடிவடையும். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் எல்லாம் தென் ஆப்பிரிக்காவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம் " என்று தெரிவித்து இருக்கிறார்.

'சிங்கம் 2' படத்திற்கும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

சூர்யா கொடுத்த பார்ட்டி!




சின்னத்திரையில் விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த சூர்யா, சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார்.


ஸ்ருதிஹாஸன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில்
கலந்துகொண்டு பரிசுப்பணத்தை வென்று மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொடுத்து உதவினர். சூர்யாவின் குடும்ப உறுப்பினர்களான நடிகர் கார்த்தியும், நடிகர் சிவகுமாரும் இதில் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்ச்சி முடிவடைந்துவிட்ட நிலையில் நடிகர் சூர்யா, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் யூனிட்டில் இருக்கும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நேரில் சென்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.


அதுமட்டுமில்லாமல் நேற்று(15.07.12) சவேரா ஹோட்டலில் ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் சூர்யாவுடன் பணியாற்றிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் நைட் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக குஷ்பு!




நடிகை குஷ்பூ தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர். திருச்சிக்கு அருகில் ஒரு கோயில் கட்டும் அளவிற்கு குஷ்பூவிற்கு தீவிர ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சமீபமாக குஷ்பூ தனது குடும்பம், சின்னத்திரை, அரசியல் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்திவந்தாலும் எப்போதாவது ஓரிரு படங்களில் நடித்துவருகிறார்.

ஒவ்வொரு நடிகைக்கும் இருக்கும் பொதுவான ஆசை நாம் பார்த்து ரசித்து வளர்ந்த ஹீரோவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான். குஷ்பூ சிறிய வயதிலிருந்தே அமிதாப் பச்சனின் தீவிர ரசிகை. அவரோடு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது விட்டுவிடுவாரா குஷ்பூ.

இந்தியில் தயாராகிகொண்டிருக்கும் ‘மேட் டாட்’ என்ற படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா என்று ரேவதி வர்மா கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம் குஷ்பூ. அமிதாப்பின் மனைவி கேரக்டரில் நடிக்கும் குஷ்பூவைவிட, அவரது மகள்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எப்படியும் அமிதாப் பச்சனை சந்தித்துவிடுவோம் என்று.

சந்தைக்கு வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைப்பேசி




கார்பன் மொபைல் தயாரிப்பு நிறுவனம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெயரில் புதிய மொபைல் ஃபோன்களை வெளியிடவுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் குரல் மற்றும் அவரது பஞ்ச் வசனங்கள் என விசேட வசதிகள் கொண்ட இந்த ஃபோன்களில் கோச்சடையான் படத்தின் மேக்கிங் வீடியோக்கள், ரஜினிகாந்த்தின் கையெழுத்து என்பனவும் ஃபோனில் இடம்பெற்றிருக்கிறதாம். கோச்சடையான் திரைப்பட வெளியீட்டின் விளம்பரத்திற்காக கார்பன் மொபைல், இவ்வாறு ஐந்து இலட்சம் மொபைல் ஃபோன்களை வெளியிடவிருக்கிறார்கள்.

புதிய ஸ்மார்ட்ஃபோன்களிலும், கார்பன் மொபைல் நிறுவனத்தின் Smarttab 1 ஃபோனிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரையும் இந்த ஃபோன்களில் பார்க்க முடியுமாம்.

ரஜினிகாந்த் ஃபோன்களுக்கு உள்ள சிறப்பு எப்படி இருக்கலாம் என கற்பனையாக ஃபெஸ்ட்போஸ்ட் இணையத்தளம் வெளியிட்டுள்ள சில பஞ்ச். இவை

நீங்க ரஜினிகாந்த் ஃபோனுக்கு Call பண்ண தேவையில்ல.: அது உங்களுக்கு Call பண்ணும்.

உங்க சொந்த நம்பருக்கு அதுவே Miss call பண்ணும்

ரஜினிகாந்த் ஃபோன் ரூம்ல இருந்தா, மத்த எல்லா ஃபோனும் சைலெண்ட் மூட்ல மாறிடும்.

ரஜினிகாந்த் ஃபோன்களில் வேறென்ன ஸ்பெஷல் இருக்கலாம்? : உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

தல அஜித் இதுவரை பெற்ற விருதுகள்!


ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்படும் அஜித், தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

தல கடந்துவந்த பாதிகளில் அவருக்கு மகுடம் சூட்டிய விருதுகளின் தொகுப்பு உங்களுக்காக…!

பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது - அஜித் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்)

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - வாலி திரைப்படத்துக்காக

சினிமா எக்ஸ்பிரஸ் விருது - வாலி திரைப்படத்துக்காக

தினகரன் சினிமா விருது - வாலி திரைப்படத்துக்காக

சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக

சிறப்பு நடிகருக்கான மாநில விருது – 2001 ஆம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக

தினகரன் சினிமா விருது - 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக

தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக

சிறந்த வில்லன் மற்றும் மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருது - மங்காத்தா படத்துக்காக