Tuesday, 24 July 2012

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 7.1 சவுண்ட் தொழில்நுட்பம்!

First time 7.1 sound system in tamil cinema

         இதுவரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த 7.1 சவுண்ட் தொழில்நுட்பம் முதன்முறையாக தமிழ்படம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்து வரும் ஆதிபகவன் படம் தான். ஏ.ஆர்.ரஹ்மானின் ஏ.எம்.ஸ்டூடியோ தான் இந்த தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் புகுத்துகிறது.
இதுகுறித்து அமீர் கூறியுள்ளதாவது, சினிமாவின் வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்களும் முக்கிய காரணம். ஹாலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாக்களில் ஏற்கனவே 7.1 சவுண்ட் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இப்போது தான் தமிழில் முதன்முறையாக புகுத்தப்பட இருக்கிறது. அதுவும் முதல்படம் என்னுடைய ஆதிபகவன் படம் என எண்ணும்போது பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கோட்சேவாக மாறும் ப்ருத்விராஜ்!

Prithviraj to play Godse

       மலையாள பட உலகின் முன்னணி நடிகராக இருக்கும் ப்ருத்விராஜ், விரைவில் ஒரு வித்தியாசமான வேடத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக்‌ கொன்ற கோட்சே வேடத்தில் நடிக்க இருக்கிறார். தமிழில் சத்தம் போடாதே, மொழி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ப்ருத்விராஜ். மலையாள படஉலகிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுதவிர இந்தியிலும் நடித்து வருகிறார். பிரபல டைரக்டர் ஷாஜி கைலாஷ் மலையாளம் மற்றும் தமிழில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் கோட்சே வேடத்தில் ப்ருத்விராஜ் நடிக்க இருக்கிறார்.

கோட்சேயின் வாழ்க்கை சம்பவங்கள் படமாக இருக்கிறது. அவனது குடும்ப சூழல், காந்தியை கொல்ல வகுத்த திட்டங்கள், அதன் அரசியல் பின்னணி, காந்தியை கொல்வதற்கு முந்தைய நாள் கோட்சேயின் மனநிலையும், உணர்வு போராட்டங்களும் எப்படி இருந்தன போன்றவை இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக படத்தின் டைரக்டர் ஷாஜி கைலாஷ் கூறியுள்ளார்.

Monday, 23 July 2012

சமந்த நடிகைக்கு அட்வைஸ் செய்யும் மகேஷ நடிகர்.


   
        சீட்டா‘ பட இயக்குனர் தல ஹீரோகிட்ட கதை சொன்னாராம்... சொன்னாராம்... ஆனா புது படத்தோட ஸ்கிரிப்ட்ல திருப்தி அடையலையாம். இயக்கத்த போன்ல கூப்பிட்ட ஹீரோ, ‘ஸ்கிரிப்ட்ட இன்னும் பெட்டரா டெவலப் பண்ணுங்கÕன்னு சொல்லிட்டாராம். இதையடுத்து இயக்கம் ஸ்கிரிப்ட்டை டெவலப் பண்றதுக்காக ரூம்போட்டு தீவிர டிஸ்கஷன் நடத்துறாராம்... நடத்துறாராம்...
         சமந்த ஹீரோயின் டோலிவுட் ஹீரோ மகேஷானவரோடு நட்பா பழகுறாராம்... பழகுறாராம்... இண்டஸ்ட்ரில யார்கிட்ட எப்படி பழகணும்னு ஹீரோ ஐடியா கொடுக்கிறாராம். அவரோட டிப்ஸ வேதவாக்கா எடுத்துகிட்டு அப்படியே பாலோ பண்றாராம் ஹீரோயின். அதோட டாப் இடத்த பிடிச்சி பிஸியாயிட்டாலும் மகேஷ படத்துக்கு மட்டும் கால்ஷீட் மறுக்க மாட்டேனு வாக்கு கொடுத்திருக்காராம்... கொடுத்திருக்காராம்...
        நமீ ஹீரோயின்கிட்ட பாலிடிக்ஸல என்ட்ராவீங்களானு கேட்டா உச்ச ஸ்டார் பாணில ‘நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாதுனு பதில் சொல்றாராம்... சொல்றாராம்... அதேபாணில சகுனி ஹீரோயின் பிரணித நடிகைகிட்ட கேட்டப்போ, ‘நா வர்றைதவிட காட்டன் வீர ஹீரோ வந்தா நல்லது செய்வாருனு பதில் சொல்றாராம். இதைகேள்விபட்ட நடிகரு, ‘என்னை வம்புல மாட்டிவிட அம்மணி எத்தனை நாளா யோசனை பண்ணிட்டிருந்தாங்கனு நக்கலா கேக்குறாராம்... கேக்குறாராம்..

முக்கிய சேனலை பகைத்துக் கொண்ட அமீர்?



  


       அமீர் என்றாலே சர்ச்சைதான் போலிருக்கிறது. ஃபெப்ஸி பிரச்சனையில் வாளெடுத்துசுழற்றாத குறையாக பலரையும் அதிர வைத்துக் கொண்டிருக்கும் அவர் சைலண்டாக இன்னொரு காரியத்தையும் செய்து குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்றின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார்.

ஒரு பிரபல தொலைக்காட்சியில் முஸ்லீம்கள் பர்தா அணிவது சவுரியமா, அசவுகர்யமா என்றொரு விவாத அரங்கம் நடக்கவிருந்தது. இதை கேள்விப்பட்ட அமீர், முஸ்லீம் பிரமுகர்கள் சிலரை சந்தித்து இப்படியெல்லாம் நடக்கிறதே இதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா என்று கூற, பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட சேனலை ரவுண்டு கட்டி நிகழ்ச்சியையே நிறுத்திவிட்டார்கள்.

சேனல் சும்மாயிருக்குமா? இனி அமீர் தொடர்பான எந்த நிகழ்ச்சியும் நம்ம சேனலில் வரக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறார்களாம்.

அஜீத்,விஜய் படங்களுக்காக காத்திருக்கும் கும்கி நாயகி.


lakshmi Menon waiting for Ajith and Vijay movies.

            கும்கி' படத்தின் ஹீரோயின் லட்சுமி மேனனுக்கு செம டிமாண்ட் கோடம்பாக்கத்தில்!இப்படத்தின் ரிலீசுக்கு முன்பே பல கம்பெனிகளில் இருந்தும் அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் விமலுடன் ஜோடியாக நடிக்க இவரை அழைத்தாராம் 'பசங்க' பாண்டிராஜ். கள்ளுப்பானையை உடைச்சோமா கண்ணு மண்ணு தெரியாம குடிச்சோமான்னு இல்லாம, இன்னைக்கு சொல்றேன், நாளைக்கு சொல்றேன் என்று பதிலை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தாராம் லட்சுமி. இத்தனைக்கும் கைநிறைய சம்பளம் தரவும் தயாராக இருந்தார் பாண்டிராஜ்.

லட்சுமி மேனனின் தயக்கத்திற்கு காரணம் கும்கி இயக்குனர் பிரபு சாலமன்தான் என்கிறார்கள் இப்போது. 'நம்ம படம் ரிலீசுக்கு பிறகு உன்னை சூர்யாவும் அஜீத்தும் கூட கூப்பிடுவாங்க. அவசரம் எதுக்கு?' என்றாராம் லட்சுமியிடம்.

திருப்பதி இயக்குனரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சூர்யா?



   


            மாற்றானும் ஹிட்டாகிவிட்டால் சூர்யாவின் ஒவ்வொரு நரம்பும் எலும்பாகிவிடும்என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் இதே கோடம்பாக்கத்தை சேர்ந்த முன்னணி இயக்குனர்கள் சிலர். தங்களுக்கு கால்ஷீட் தரவில்லையே என்ற ஆதங்கத்திலும் ஆத்திரத்திலும் அவர்கள் இப்படி பேசி வருவது இயற்கையே.

ஆனால் இப்படியெல்லாம் பேச வைக்கிற அளவுக்கு அந்த வயிற்றெரிச்சலில் மேலும் சில சுள்ளிகளை போட்டு அந்த தீயை வளர்த்துக் கொண்டிருக்கிறாராம் சூர்யா. அதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஒரு தகவல் இப்போது.

புகழ் பெற்ற கோவிலின் பெயரை தன் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் அந்த இயக்குனர் சமீபத்தில் சொந்தப்படங்களை எடுத்து வெற்றியும் பெற்றுவருகிறார். திடீரென்று இவர் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம் சூர்யா. இதை தொடர்ந்து சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார் டைரக்டர். எல்லாம் சில வாரங்கள்தான்.

சட்டென்று அவரை அழைத்த சூர்யா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் கொடுக்க முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஸாரி... என்று கூறிவிட்டாராம்.

திருப்பதி ஏழுமலையானே, சிலருக்கு நிலையான யோசனையை கொடு என்று வேண்டிக் கொண்டிருக்கிறது மொத்த கம்பெனியும்.

தமிழ் சினிமாவில் ஐந்தாவது இடத்தில் கார்த்தி.

Karthi is the fifth place in the Tamil Cinema.
            தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவரின் சம்பளத்தினை அடுத்து கிட்டதட்ட ஒரே அளவு சம்பளம் வாங்கும் வரிசையில் இருப்பவர்கள் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம்.. இந்த நால்வர் தான்.தற்போது ஐந்தாவதாக அவ்வரிசையில் கார்த்தியும் இணைந்து இருக்கிறார்.

'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் மகான் அல்ல', 'பையா', 'சிறுத்தை', 'சகுனி' ஆகிய 6 படங்களில் மட்டுமே நடித்து இருப்பவர் எப்படி இந்த வரிசையில்? என்று பலரும் அதிசயிக்கிறார்கள்.

முதல் படமான 'பருத்தி வீரன்'ல் தனது அசாதாரண நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஆஸ்தான இடத்தினைப் பிடித்தார். 'ஆயிரத்தில் ஒருவன்' சரிவர மக்களிடம் எடுபடாமல், பத்தோடு பதினொன்றாக ஆனது.

'நான் மகான் அல்ல' படம் "பக்கத்து வீட்டு பையன் போலவே இருக்கான் இல்ல...!" என்று பேச வைத்தது.'பையா','சிறுத்தை' ஆகிய இருபடங்கள்தான் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் கார்த்தி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறது.

அதிலும் 'சிறுத்தை' ஏ, பி, சி என மூன்று சென்டர்களிலும் வசூலை வாரி இறைத்தது.ஒன்றரை வருடங்கள் கழித்து வெளியான 'சகுனி' படம் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், கார்த்தியின் தேதிகள் கேட்டு போய் இருக்கிறார்.அவரது தேதிகள் கிடைத்தால் போதும் சம்பளம் 14 கோடி என்று கூறி இருக்கிறார்.

அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் என இவர்கள் போராடி மேலே வந்தபின் அடைந்த சம்பளத்தை, வெறும் ஆறே படங்களில் நெருங்கி விட்டார் கார்த்தி என்கிறது கோலிவுட்.

'சகுனி' உருட்டி விட்டாலும், 'அலெக்ஸ் பாண்டியன்' மிரட்டும் என காத்திருக்கிறார்கள் கார்த்தி ரசிகர்கள்.