Sunday, 5 August 2012

மாற்றான் பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யாவின் ஹீரோயின்கள் பங்கேற்பு.


சூர்யா, தமன்னா நடித்து வெற்றி பெற்ற அயன் படத்தை இயக்கிவர் கே.வி. ஆனந்த். இவர் மீண்டும் சூர்யாவை வைத்து மாற்றான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.


சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளதால் மாற்றான் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றான் பட பாடல் வெளியீட்டு விழா வருகிற 9-ந்தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. ஆட்டம்- பாட்டம் கொண்டாட்டம் என பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். நடிகர், நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள். இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.


எனவே விழாவில் பங்கேற்கும்படி இதுவரை சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளை கே.வி.ஆனந்த் அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் நயன்தாரா, திரிஷா, அசின், ஸ்ருதிஹாசன், தமன்னா, திவ்யா ஸ்பந்தனா, சமீரா ரெட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர். மாற்றான் படத்தில் ஜோடியாக நடிக்கும் காஜர் அகர்வாலும் கலந்து கொள்கிறார்.


அனைவரும் மேடையில் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசை கச்சேரியை நடத்துகிறார். பின்னணி பாடகர்கள் இதில் பங்கேற்று பாடுகிறார்கள். ரஷ்ய பெண்களின் நடன நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியும் இதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோச்சடையான் படத்திற்காக ஜப்பான் மொழி கற்கும் ரஜினிகாந்த்.


ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜியின் மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இப்படம் ரஜியின் பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோச்சடையான் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதுபோல் படத்தின் சிறப்பு காட்சியையும் டிசம்பர் மாதம் அங்கு திரையிடுகிறார்கள்.


இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ரஜினியும், தீபிகா படுகோனேவும் டோக்கியோ செல்ல உள்ளனர். அப்போது ஜப்பானிய ரசிகர்களை ரஜினி சந்தித்து பேச உள்ளார். இதற்காக ரஜினி தற்போது ஜப்பான் மொழி கற்று வருகிறார். ஆசிரியரை வைத்து அந்த மொழியை கற்கிறார்.


ரஜினிக்கு ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். இப்போது கூடுதலாக ஜப்பான் மொழியும் கற்கிறார். முத்து படம் ஜப்பானில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ரசிகர் மன்றமும் அங்கு தொடங்கப்பட்டு உள்ளது.


ஜப்பானில் ரஜினியின் பல படங்கள் ஜப்பானிய மொழி சப்டைட்டிலுடன் திரையிடப்பட்டும் வருகின்றன. சுனாமி தாக்கி பேரழிவு ஏற்பட்டபோது ஜப்பானுக்கு செல்ல ரஜினி விரும்பினார். ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. இப்போது கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவிலும், பிரிமியர் காட்சியிலும் பங்கேற்க ஜப்பான் செல்கிறார். ரஜினி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். விமான பயணத்தை அவர் உடல் நிலை ஏற்குமா? என டாக்டர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.


டாக்டர்கள் பிரச்சினை இல்லை. பயணம் செய்யலாம் என்று அவர்கள் பச்சைக்கொடி காட்டி விட்டார்களாம். டோக்கியோவில் ஜப்பான் மொழியிலேயே ரசிகர்களிடம் ரஜினி பேச உள்ளார்.

போக்கிரிக்கு அடுத்து விஜய்,அசின்,பிரபுதேவா மீண்டும் இணைகின்றனர்.



விஜய் 'துப்பாக்கி' படவேலைகளுக்காக மும்பை சென்று இருந்தார். அப்போது பிரபுதேவா வீடு அருகில் இருக்கும் தகவல் தெரிய வந்தது. உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்றார். விஜய் வந்த விவரம் அறிந்ததும் அசினும் அங்கு சென்றார். மூவரும் விருந்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.


ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே மீண்டும் மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா இந்தியில் தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார். அசினும் இந்தியில் நடிக்கிறார். தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் விஜய், அசினை ஜோடியாக நடிக்க வைப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வனை தொடராக எடுக்க முயற்சிக்கும் மூன்றெழுத்து சேனல்.




புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கலைஞானி கமல்ஹாசன், டைரக்டர் மணிரத்னம் ஆகியோர் முயற்சி செய்தும் செ.மீ கூட நகராத ஆசைதான் 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக எடுப்பதென்பது. இந்த ஆசை தற்போது டைரக்டர் செல்வராகவனுக்கும் வந்திருப்பதால் 'பேஸ்த்' அடித்துக் கிடக்கிறது ஏரியா.

ஒருவேளை அது நடந்துவிட்டால் செல்வராகவனின் வேகத்திற்கு இப்படம் குறைந்தது பத்து வருட தயாரிப்பாக இழுக்கும் என்பதை இப்பவே யூகித்துவிடலாம். இதற்கிடையில் இந்த முயற்சியில் ஒரு மூன்றெழுத்து சேனல் இறங்கியிருக்கிறதாம்.

சின்னத்திரையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கும் இந்த சேனலால் இது முடியும் என்றாலும், நடக்கிற வரைக்கும் நம்புவானேன்?

திரையுலக வாழ்க்கையில் 20 ஆண்டுகளை கடந்த நடிகர் அஜீத்குமார் 51 படங்கள் நடித்துள்ளார்


1995-ல் வந்த 'ஆசை' படத்தின் வெற்றி பிரபலபடுத்தியது. 'வான்மதி', 'காதல்கோட்டை', 'உல்லாசம்', 'காதல் மன்னன்', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' படங்கள் அவரை முன்னணி நடிகராக்கியது.


அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து 1999-ல் ரிலீசான 'வாலி' படம் அவரை இன்னொரு உயரத்துக்கு கொண்டு சென்றன. 'அமர்க்களம்', 'முகவரி', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களில் அவருக்கு பெரிய நடிகர் அந்தஸ்தை வழங்கின.


'சிட்டிசன்', 'வரலாறு' படங்களில் அஜீத் நடிப்பு பேசப்பட்டது. 'பூவெல்லாம் உன்வாசம்' படத்துக்கு தமிழக அரசிடம் இருந்து சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.


'அசல்', 'மங்காத்தா', 'பில்லா-2' என அவரது சினிமா பயணம் தொடர்கிறது. இதுவரை 51 படங்களில் நடித்துள்ளார். 50-வது படமாக 'மங்காத்தா' வெற்றி பெற்றது. தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படித்தில் நடிக்கிறார். பழைய நடிகை ஸ்ரீதேவியின் 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' படத்தின் தமிழ் பதிப்பில் கவுரவ தோற்றத்திலும் வருகிறார்.

‘பிகினி’ உடை அணிந்து குளிக்கும் காட்சியில் கிளுகிளுப்பாக நடித்த காதலில் விழுந்த நடிகை


       மாசிலாமணியுடன் காதலில் விழுந்த நடிகை சினிமாவில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு முயற்சியாக மேற்கொண்டு வருகிறார். தேசிய விருது இயக்குனர் இயக்கும் படத்தில் முத்தக் காட்சியில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது ஒலிபெருக்கி படத்தில் ‘பிகினி’ உடை அணிந்து குளிக்கும் காட்சியில் கிளுகிளுப்பாக நடித்துள்ளாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், கதைக்கு ஏற்ப கவர்ச்சி இருந்தால் தவறு ஏதும் இல்லை என்று மழுப்பி வருகிறாராம்.

பசங்க இயக்குனர் இயக்கும் முழு நீள நகைச்சுவை படமொன்ற இயக்கி வருகிறார். இப்படத்தில் கரகாட்ட பாடல் ஒன்று இடம்பெறுகிறதாம். இதற்கு காரணம் அவரது இரண்டு வயது மகன்தானாம். டிவியில் குத்துப்பாடல்கள் ஒளிபரப்பினால் இவரது மகனுக்கு குஷி வந்துவிடுமாம். தன்னை மறந்து ஆடிவிடுவானாம். அதனால் தன் மகனை ரசிகனாக ஏற்றுக் கொண்டு இந்த கரகாட்ட பாடலை வைத்துள்ளாராம் இயக்குனர்.

ஜீ தோல்விக்குப் பின் அஜீத்துடன் மீண்டும் இணைகிறாரா லிங்குசாமி.



       இயக்குநர் லிங்குசாமி தன் படங்கள் குறித்து எப்போது பத்திரிகையாளர்களிடம் பேசினாலும், ஒரு படத்தைப் பற்றி மட்டும் பேசவே மாட்டார். அந்தப் படம் அஜீத் நடித்த ஜீ!

2005-ல் அஜீத் - த்ரிஷா நடிப்பில் உருவான இந்தப் படத்தில் வித்யாசாகர் இசையில் நல்ல பாடல் கூட உண்டு. ஆனால் படம் படு சுமாராகப் போனதால், ஹீரோ அஜீத்தும் சரி, இயக்குநர் லிங்குசாமியும் சரி.. இந்தப் படத்தை மறக்க விரும்புவது இயல்புதான்.

ஆனால் இப்போது இந்த இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்பு உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அஜீத் இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இயக்குநர் லிங்குசாமி இதுபற்றிக் கூறுகையில், "அஜீத்துடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ஆசைதான். ஆனால் அதற்கு நல்ல ஸ்க்ரிப்ட் வேண்டும். அஜீத்துக்கு ஏற்றமாதிரி அமைய வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இப்போது சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கும் வேலையில் பிஸியாக உள்ளார் லிங்குசாமி.